முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு துறை அலுவலர்கள் முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக அதிக கொடி நாள் நிதியை ஈட்டித்தர வேண்டும்: கலெக்டர் சி.ராமன் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா பட்டாமாறுதல்வேலைவாய்ப்புகடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகைஇ காவல்துறை பாதுகாப்பு மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 591 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நிதியுதவி

 

இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் 6 முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் பயனாளிகளுக்கு கல்வி பயன்பாட்டிற்காக ரூ50 ஆயிரம் மதிப்பில் நிதியுதவிகளை கலெக்டர் வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் 2014 ஆண்டில் கொடிநாள் வசூல் நிதியில் மிகை வசூல் புரிந்தமைக்காக உதவி இயக்குநர் பேரூராட்சிகள் திருஞானத்திற்கு ஆளுநர் பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் குமார் அவர்களுக்கு தலைமை செயலாளரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினையும் வழங்கி பாராட்டு தெரிவித்து அனைத்து அரசு துறைகளை சார்ந்த அலுவர்கள் நாட்டை காக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக அதிக கொடி நாள் நிதியை ஈட்டித்தர வேண்டும் என்று கூட்டத்தில் கலெக்டர் சி.அ.ராமன், கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.கஜேந்திரன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மணிவண்ணன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து