முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் நீதிமன்றத்திற்கு 4அரசு வழக்கறிர்கள் நியமனம்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      வேலூர்

 

அரக்கோணத்தில் உள்ள நான்கு நீதிமன்றங்களுக்கும் லோகபிராமன், தியாகராசன், சேகர், மற்றும் டில்லிபாபு ஆகிய நான்கு வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யபட்டு உள்ளனர். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் நிலஆர்ஜித சிறப்பு நீதிமன்றம், சார்பு நீதி மன்றம், சார்பு நீதிமன்ற குற்றவியில் கூடுதல் நீதிமன்றம், மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என மொத்தம் நான்கு நீதி மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

 

நியமனம்

இந்த நான்கு நீதிமன்றங்களுக்கு உரிய அரசு வழக்கறிஞர்கள் பதவி நீண்ட நாட்களாக நிரப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி பரிந்துரைகளின் பேரில் நான்கு நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கான ஆணையை தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன்மார்டி வெளியிட்டார். மேலும், இந்த ஆணையை மாவட்ட கலெக்டர் ராமன் வழக்கறிஞர்களிடம் வழங்கினார். அதன்படி நிலஆர்ஜித சிறப்பு நீதிமன்றத்திற்கு 19 ஆண்டு காலம் வழக்கறிஞராகவும், மத்திய சான்று உறுதி மொழி ஆணையராகவும் பணியாற்றி வரும் ஆர்.லோகபிராமன் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

 

மேலும், சார்பு நீதி மன்றத்திற்கு அரக்கோணம் ஜோதிநகரரில் வசிக்கும் எஸ்.தியாகராசன் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சார்பு நீதிமன்ற குற்றவியல் கூடுதல் நீதிமன்றத்திற்கு பரித்திபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சேகர்; அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு புதுகேசாவரம் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.டில்லிபாபு அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நியமனம் பெற்ற நான்கு வழக்கறிஞர்களை மூத்த மற்றும் சக வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் தனித்தனியாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து