முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியில் யோகா தினம்- யோகா பயிற்சி முகாம்: வருகால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.சிங் தொடங்கினார்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகாபயிற்சி முகாமினை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் முன்னிலையில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.சிங் தொடங்கி வைத்தார்.

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு இன்று விஐடி பல்கலைக்கழகத்தில் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. விஐடியில் உள்ள புட்டீஸ் அரங்கில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் முன்னிலையில் நடைபெற்ற இப் பயிற்சி முகாமினை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் எஸ்.டி.சிங் தொடங்கி வைத்தார்.

யோகா பயிற்சி முகாமில் விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், பதிவாளர் முனைவர் கே.சத்திய நாராயணன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர் என 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர். விஐடி உடற்கல்வி துறை துணை இயக்குநர்கள் தியாகசந்தன் மற்றும் மங்கையற்கரசி ஆகியோர் யோகா பயிற்ச்சியினை செய்து காட்டினர். இந் நிகழ்ச்சியில் விஐடி இணைதுணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், உடற்கல்வி துறை இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் ஏ.ரூபன் குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து