முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் பாவடி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு

புதன்கிழமை, 21 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 41 - ல் உள்ள மாநகராட்சி பாவடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு பணிகளை தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு மேற்கொண்டார்.

 

ஆணையாளர் ஆய்வு

 

இப்பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார். விளையாட்டு மைதானம் பராமரிப்பு , சமையலறை பராமரிப்பு மற்றும் ஆய்வக வசதிகளையும் பார்வையிட்டார். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்களின் சேர்க்கை மற்றும் வருகை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். பள்ளி கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

மேலும் ஆணையாளர் மாநகராட்சி பாவடி ஆரம்ப பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இப்பள்ளியில் மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் மாணவ, மாணவியர்களின் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் கல்விக்கான பயிற்சிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். பின்னர் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் பணியாளர்களின் வருகை மற்றும் வரி செலுத்தும் மையங்களில் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.

அலுவலகத்தில் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் வரி வசூல் மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளையும் ஆய்வு செய்தார். அம்மாபேட்டை மண்டலத்தில் வரி வசூல் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை தொய்வின்றி அடைவதற்கு தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளுமாறும், சேலம் மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுவதற்கு அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாய்வின் போது உதவி செயற்பொறியாளர் எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி, ஆர்.செந்தில் குமார், மாநகராட்சி பாவடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ரவி மாநகராட்சி பாவடி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி கே. காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து