முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ப்பு: புதுச்சேரி அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் நாராயணசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக மத்திய அரசு நர்டு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்தது. புதுiவில் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது சேதராப்பட்டில் ஸ்மார்ட்சிட்டி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். இது முதல் சுற்றிலேயே ஒப்புதல் அளிக்கப்படவில்லை. 2-வது முறையாக வரைபடத்தை திருத்தி நகர மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பினர். அதையும் மத்திய அரசு நிராகரித்தது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக-காங்கிரஸ்  ஆட்சி ஏற்பட்டது. அப்போது அமைச்சரiவையில் விவாதித்து புதுவை நகரத்தையும், அது சார்ந்த பகுதியையும் உள்ளடக்கி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வர செய்தோம். நகர பகுதியில் ராஜ்பவன், உருளையன்பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகள் அடங்கும். இதற்கான வரைபடத்தை வல்லுனர் குழு ஆலோசனையோடு அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

புதுவை தேர்வு

தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர். உள்ளாட்சி பொதுப்பணித்துறை செயலளர்கள் டெல்லிக் நேரில் சென்று இத்திட்டத்தை சமர்ப்பித்து விளக்கினோம். இதையடுத்து நகர்புற மேம்பாட்டுத் துறை புதுவை நகரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைப்பதாக வாக்குறுதி அளித்தனர். தற்போது புதுவை நகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காகக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில் 8-வது நகரமாக புதுவை இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின்படி ரூ1850 கோடியில் நகரம் புதுப்பிக்கப்படும். மத்திய அரசு ரூ.500 கோடியும், மாநில அரசு ரூ.500 கோடியும், பிரெஞ்சு அரசு ரூ.500 கோடீயம், வெளிமாநிலங்களில் ரூ.350 கோடியும் பெற்று திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல்அளளிக்கப்பட்டுள்ளது. இது புதுவை அரசு எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

ரூ.500 கோடி கிடைக்கும்

இந்த திட்டங்களை 4 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும். முதல் முறையாக மத்திய அரசு நகர்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் புதுவைக்கு ரூ.500 கோடி கிடைக்கின்றது. பிரெஞ்சு அரசாங்கத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களும இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்நகரத்தின் 24 மணி நேரமும் மின்சாரம், குடிநீர் கிடைக்கும். சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, வாகன நிறுத்துமிடம், ரெயில்வே நிலையம் சீரமைத்தல், புதிய பஸ் நிலையம், போக்குவரத்தை சீரமைக்க மேம்பாலம், பிரெஞ்சு கட்டிடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல் படுத்தப்படும். 5.5 சதுர கிமீ பரப்பில் இந்த திட்டங்கள்செயல் படுத்தப்பட உள்ளது.

நன்றி

இத்திட்டத்தற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கும், நகர்புற மேம்பாட்டுத் துறைக்கும்,மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். திட்டத்தை முறைப்படி தயாரித்த அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து