முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கல்விக் கொள்கையை வகுக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் குழு

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தேசிய கல்வி கொள்கையை வரையறுக்க பிரபல விஞ்ஞானி  கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

நாட்டின் கல்விக் கொள்கையை மறுசீரமைக்கும் பொருட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான விஞ்ஞானி  கஸ்தூரி ரங்கன், தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ள இந்த குழுவில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மாணவர்களின் கல்வி திறனை அதிகரிப்பது, நாடு முழுவதும் ஒரே விதமான கல்வி கொள்கைகளை கொண்டு வருவது உள்ளிட்டவைகள் குறித்து இந்த குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர்  டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான ஐவர் குழு தயாரித்த கல்வி கொள்கை அறிக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதியன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் தற்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து