முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை தேனிமலையில் பழமைவாய்ந்த கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

மகாகும்பாபிஷேகம்

 

மகா கும்பாபிஷேகத்தையட்டிஅருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, கலசபூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் முதற்கால யாக சாலை பூஜைகள் மகாதீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நேற்று காலை 6 மணியளவில் 2ம் கால யாக சாலை பூஜைகள் கோபூஜை ஷண்ணவதி ஹோமம் 2ம் கால மகா பூர்ணாஹீதி, தீபாராதனையும் 9.30 மணியளவில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் கெங்கையம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணியளவில் கெங்கையம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கெங்கையம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பி.செந்தில்முருகன், செயலாளர் எம்.இராமச்சந்திரன், பொருளாளர் முனியப்பன், துணைத் தலைவர் இ.தனசேகரன், உபதலைவர்கள் அருள், குப்பன், மற்றும் விழாக்குழுவினர், தேனிமலை பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து