முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சப்-இன்ஸ்பெக்டரிடம் மாதிரி குரல் பதிவு செய்ய சுப்ரீம்கோர்ட்டு தடை

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, லஞச குற்றச்சாட்டுக்குள்ளான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் குரல் மாதிரியை பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

அரியானா மாநிலத்தில் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் தரம்பீர் சிங். இவர் புகார் கொடுக்க வந்தவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் ஹிஸார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணையானது விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தரம்பீர்சிங் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதற்கு ஆதரமாக புகார் செய்த குமார் ஒரு சிடியை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் சப்-இன்ஸ்பெக்டர் தரம்வீர் சிங் தன்னிடம்  ரூ.15 ஆயிரம்  லஞ்சம் கேட்டது குறித்து  பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குமார் கூறினார். மேலும் குமார் சிடி தாக்கல் செய்திருப்பதால் சிங்கின் மாதிரி குரலை பதிவு செய்ய அனுமதிக்கும்படி அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனையொட்டி  இந்த வழக்கில் சிங்கின் மாதிரி குரலை பதிவு செய்ய விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது. மாதிரி குரலை பதிவு செய்ய அனுமதிக்கும்படியும் சிங்கிற்கு விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பஞ்சாப்-அரியான மாநிலங்களின் ஐகோர்ட்டில் சிங், அப்பீல் செய்தார். விசாரணையின்போது சிடியானது உண்மையானதா அல்லது பொய்யா என்பது குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மாதிரி குரலை பதிவு செய்து அதை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு சரிபார்த்த பின்னர்தான் முடிவு செய்யமுடியும் என்று கூறியதோடு விசாரணை  கோர்ட்டின் உத்தரவில் தலையிட எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று ஐகோர்ட்டும் கூறிவிட்டது. இதையும் எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சிங் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனுவை கோடைகால விடுமுறையில் உள்ள டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே. கவுல் ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. சிங் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குரல் மாதிரியை பதிவு செய்ய சிங்கின் அனுமதியை பெறவில்லை. மேலும் அந்த சிடியானது போலியானது என்று வாதாடினார். இதனை கேட்ட நீதிபதிகள்    விசாரணை கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகள் சிங்கிடம் மாதிரி குரல் பதிவு செய்ய பிறப்பித்த  உத்தரவுக்கு தடை விதித்தது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து