முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு அவசரப்படுவது ஏன்? மத்திய அரசுக்கு யெச்சூரி கேள்வி

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமுல்படுத்துவதில் மத்திய அரசு அவசரப்படுவது ஏன் என்று இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டுவரும் ஜிஎஸ்டி வரிவதிப்பு முறை வரும் ஜூலை 1-ம் தேதியில் இருந்து நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட உள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தநிலையில் ஜிஎஸ்டி வரிவதிப்பு முறையை அமுல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2014-ம்  ஆண்டு மே மாதம் வரை  குஜராத் மாநில முதல்வராக இருந்த பிரதமர் மோடி, அப்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை எதிர்த்தார்  என்று யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அவசரம் அவசரமாக அமுலுக்கு மத்திய அரசு கொண்டுவருவது தகாதது. முதலில் ஜிஎஸ்டி முறையை பாரதிய ஜனதாவை சேர்ந்த அனைத்து தலைவர்களும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி எதிர்த்தார் என்றும் டுவிட்டரில் யெச்சூரி மேலும் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து