முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழில்சோலை மூலிகைப் பண்ணையில் பள்ளி மாணவ-மாணவியர் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை மூலிகை பண்ணை உள்ளதுஇங்கு, ஏராளமான அறிய வகை மூலிகை மரங்கள் மற்றும் செடிகள் உள்ளன. செய்யாறு விருட்சம் இண்டர்நேஷனல் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று மூலிகை பண்ணையை பார்வையிட வந்தனர். அங்குள்ள அனைத்து மரங்கள், செடிகளை பார்வையிட்டனர்.

மூலகை பண்ணை

இங்குள்ள உத்ராட்சம், ஆப்பில், ஸ்டாபெரி உள்ளிட்ட அறியவகை செடிகளை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் ஒவ்வொரு மரங்களின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்தும் மூலிகை பண்ணை நிறுவனரும் மரம் வளர்போர் சங்கத் தலைவருமான பா..மாசிலாமணி, மாணவ- மாணவியர்களுக்கு விளக்கி கூறினார். பின்னர் மூலிகை பண்னையின் விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து விளக்கமளித்தார். மேலும் இயற்கை விவசாயம் மனிதர்கள் நோய் நொடி இன்றி வாழ வழிவகை செய்யும் எனவே இயற்கை விவசாயம் குறித்து தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொண்டு இயற்க்கையோடு ஒன்றி வாழ பழகிட வேண்டும் என்றார்

பண்னையை பார்வையிட வந்த பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு எழில்சோலை நினைவு கூறும் வகையில் பயன் தரும் மரக்கன்றுகளை எழில்சோலை மூலிகை பண்ணை நிறுவனர் மாசிலாமணி வழங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து