முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை அடுத்த ரமண மகரிஷி சுகாதார மையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் சுவிஸ் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ ரமண மகரிஷி மையத்தில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடந்தது

கண் பரிசோதனை

 விஷன் கல்லூரி தாளாரும் சுவிஸ் தொண்டு நிறுவனத்தின் செயலாளருமான ரேணுகோபால் தலைமையேற்று முகாமினை துவக்கிவைத்தார் ஸ்ரீ ரமண மகரிஷி சுகாதார மைய முதன்மை மருத்துவர் சாமுவேல் ஜெயச்சந்திரன், மருத்துவர் நிர்மலா சாமுவேல், நிர்வாக அலுவலர் இளையரசன், மனித வள மேம்பாட்டு அலுவலர் மதன்குமார், விஷன் கல்லூரி முதல்வர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் சுபாஷினி, குஷ்பு ஆகியோர் தங்கள் மருத்துவக்குழுவினருடன் நீரிழிவு நோயாளிகளுக்கு கண் விழித்திரை பரிசோதனையும் கண் பரிசோதனையும் செய்து மேல்சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.

தி.மலை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராகவன் நன்றி கூறினார் முகாமிற்கான ஏற்பாடுகளை தி.மலை சுவிஸ் தொண்டு நிறுவனம் மற்றும் புதுவை அரவிந்த் மருத்துவமனையும் செய்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து