முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி தாலுக்கா வர்தகர்களுக்கு ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      விழுப்புரம்
Image Unavailable

இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி.சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த கரத்தரங்கம் செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

 ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம்

செஞ்சி தாலுக்கா வர்த்தகர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த கருதரங்கிற்கு தாலுக்கா வர்த்தகர் சங்க   தலைவர் ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். வணிகவரி வருமானவரி ஆலோசகர் சு.பாண்டியன் வரவேற்றார். வணிகவரி ஆலோசகர் வி.ஹேமலதா முன்னிலை வகித்தார். செஞ்சி தாலுக்கா மற்றும் செஞ்சி நகர மளிகை கடை, ஜவுளி கடை, நகை கடை, ஹோட்டல்  உரிமையாளர்கள், மென்பொருள், ஷீமார்ட் ஷோரூம், நெல், அரிசி வியாபாரிகள், மெடிக்கல் உரிமையாளர்கள்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளை கேட்டறிந்தனர். வியாபாரியின் பல்வேறு கேள்விகளுக்கு சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த வி.பி.மணவாளன் பதில் அளித்தார். விழாவில் துணை வணிகவரி அலுவலர்கள் எம்.மணிபாலா, பொ.வீரபத்திரன், வர்த்தகர் சங்க செயலர் வெங்கட், மதிப்பியல் தலைவர்கள் கலியமூர்த்தி, தேவராஜ்,  துணை செயலர் ராஜகோபால், ஆலோசகர் முஹமதுஅஷ்ரப்,  ஹோட்டல் வசந்தபவன் உரிமையாளர் கண்ணன், வணிகர் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலர் சீனிவாசன்,பாலாஜிசுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கருத்தரஙகம் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து