முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது

புதன்கிழமை, 5 ஜூலை 2017      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை, சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டுத்திருவிழாவில் பிரசித்திபெற்ற பள்ளி வேட்டை இன்று நடைபெறுகிறது.

ஆராட்டுத் திருவிழா

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டுத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. சுவாமி ஐயப்பனுக்கு தினமும் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இதனால் சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பள்ளி வேட்டை

சபரிமலையில் தற்போது மழை பெய்து வருகிறது. ஆனாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள். ஆராட்டுத்திருவிழாவில் பிரசித்திபெற்ற பள்ளி வேட்டை இன்று நடைபெறுகிறது.இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட யானை மீது சுவாமி ஐயப்பன் ஊர்வலமாக எடுத்துவரப்படும் நிகழ்ச்சி இன்று இரவு 10 மணிக்கு சரங்குத்தியில் நடக்கிறது. அப்போது ஆதிவாசிகள், வேடுவர்கள் போன்று பக்தர்கள் வேடம் அணிந்து கையில் வில், அம்பு ஏந்தி சரணகோ‌ஷம் முழங்க ஊர்வலத்தில் வருவார்கள்.

ஐயப்பனுக்கு ஆராட்டு

அதை தொடர்ந்து நாளை பம்பையில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தற்போது சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அரவணை, அப்பம் பிரசாதம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

கனமழை காரணமாக சபரிமலையில் உள்ள பம்பை நதியில் அதிகளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராட அங்கு போலீஸ் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து