சுத்தமான மற்றும் தரமான பால் உற்பத்தி

புதன்கிழமை, 19 ஜூலை 2017      வேளாண் பூமி
Clean milk produ with cow

Source: provided

பால் ஒரு இன்றியமையாத சமச்சீர் உணவாக இருப்பதோடு பச்சிளங்குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும, பெரியவர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் மிகவும் ஏற்ற உணவு ஆகும். நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் பாலில் இருக்கும். எனவே பாலை சரிவிகித உணவு என்று கூறலாம். இறைச்சி சாப்பிடாதவர்கள் பாலை முக்கியமாக உட்கொள்ள வேண்டும். எனவே எல்லா வகையிலும் பயனுள்ள பாலை நல்லமுறையில் அதிலுள்ள சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்ய வேண்டும்.

எனவே கறவை மாட்டின் பாலை அசுத்தம் சேராதவாறு சேகரித்து தரமான பாலை உற்பத்தி செய்வது இன்றியமையாததாகும். தூய்மை இல்லாமல் உற்பத்தி செய்யும் பாலினால் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவலாம் மேலும் பாலில் கிருமிகள் அதிகரித்து பாலின் தரத்தைக் குறைத்து விடும.; எனவே தரமான பாலை உற்பத்தி செய்வது மிகவும் இன்றியமையாததாகும்.

பால் கறத்தல்  :  பசுவின் மடியில் பால் சுரப்பது, பல உடல்கூறு இயக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.  கன்று மடியில் ஊட்டுவதாலும், பசு தீவனத்தை பார்ப்பதாலும் அல்லது பால் கறப்பவர் மடியைத் தடவுவதாலும் நரம்புகள் மூலமக சில ஹார்மோன்கள் தூண்டப்படுவதால் பால் சுரப்பது இயக்கப்படுகிறது.

பால் கறப்பது ஒரு கலை நல்ல திறமை முதிர்ந்த அனுபவம் இவை அனைத்தும் பால் கறப்பதற்கு மிக முக்கியமாகும். பால் கறக்கும் பொழுது மிகக் கவனமாகவும் அமைதியாகவும,; அதே நேரம் விரைவாகவும் மடியில் உள்ள அனைத்து பாலை பெறும்படியும் செய்ய வேண்டும். மாடுகளுக்கு எந்த சிரமமில்லாமல் பாலை கறக்க வேண்டும்.

அடித்தல், பயமுறுத்துதல், பேரிரைச்சல் போன்றவற்றால் பால் சுரக்கும் இயக்கங்கள் தடைப்பட்டு பால் சுரப்பது நின்றுவிடும். பால் கறப்பவர் மாறினாலும்  பாலின் அளவு குறையும.; பால் கறக்க ஆரம்பித்தவுடன் மடியில் உள்ள அனைத்து பாலையும் கறக்கும்படி வேண்டும். அப்படி இல்லையென்றால் பால் மடியிலேயே தங்கிவிடும்.

பால் கறக்கும் முறைகள் மற்றும் பாலில் சேரும் அசுத்தங்களை கட்டுப்படுத்தும்  முறைகள்:

1. முழு விரல்களை உபயோகித்தல் : முழு விரல்களை உபயோகிக்கும் முறையில் அனைத்து விரல்களாலும் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையின் மீது அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம்முறையில் கன்று ஊட்டுவது போல அனைத்து பக்கங்களிலிருந்தும் ஒரே அளவான அழுத்தம் ஏற்படும். காம்புகள் பெரிதாக உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம்முறையைக் கையாள்வது சிறந்தது.

2. இருவிரல்களை உபயோகித்தல் : ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் காம்புகளை பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்து கீழ் நோக்கி இழுப்பதன் மூலம் கறக்க முடியும். இதன் மூலம் காம்புகளுக்கு ஒரே அளவான அழுத்தம் கிடைக்காது. மேலும் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு. இம்முறையைக் காட்டிலும் மேற்கூறிய முறைதான் சிறந்தது. எனினும் சிறு காம்புகள் உள்ள மாடுகளிலும் பால் கறந்து முடியும் தருவாயில் கடைசியில் இம்முறையைக் கடைபிடிக்கலாம்.

3.அசுத்தங்களை கட்டுப்படுத்துதல் :  பால் கறக்கும்போது முதல் பாலினை நீக்கிவிட வேண்டும். ஏனெனில் கறவை மாட்டின் மாட்டின் மடியினில் சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும் ஆரோக்கியமான நோயற்ற மாடுகளில் இவ்வகையான கிருமிகள் எவ்வித கெடுதலும் செய்வதில்லை. இதனால் காம்பிலுள்ள கிருமிகளை போக்கிவி;ட முடியும். கறவை மாடுகள் காசநோய், கருச்சிதைவு, கோமாரி, அடைப்பான், மடிவீக்கம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது. அதனால் மாடுகளை பரிசோதனை செய்வது அவசியம்.
மாடுகளின் உரோமம,; சாணம், மண், வைக்கோல் மற்றும் மாடுகளின் உடலில் உள்ள அசுத்தங்கள் பாலில் சேர வாய்ப்புண்டு. சில கிருமிகளும் பாலில் சேரும் எனவே மாடுகளை நன்கு தேய்த்து அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். குறிப்பாக மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட ரோமம் காணப்பட்டால் அவைகளை கத்தரித்து நீக்க வேண்டும். மிக முக்கியமாக பால் கறப்பதற்கு முன் மடியில் அல்லது பக்கத்தொடை ஆகிய பாகங்களை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, சுத்தமான உலர்ந்த துணியினால் துடைக்க வேண்டும்.

4.மாட்டுக் கொட்டகை மற்றும் சுற்றுப்புறச்சூழல்  :  பால் கறக்கும் இடம் நன்கு முறையாக கழுவி சுத்தமாக இருத்தல் வேண்டும். பால் கறப்பதற்கு முன் மாடுகளை தேய்த்தல், கொட்டகையைக் கூட்டுதல,; மாடுகளுக்கு காய்ந்த தீவன வகைகளைக் கொடுத்தல் போன்றவைகளால் சுற்றுப்புறச் சூழல் அசுத்தமடைந்து பாலில் நுண்ணுயிரிகள் சேர வாய்ப்புண்டு. மேலும் குழிப்புல் சாணம் முதலியவற்றிலிருக்கும் வாசனையை பால் எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்டது. பால் கறக்கும் போது இவ்வசுத்தங்களைத் தவிர்த்தல் வேண்டும். குறுகிய வாயுள்ள பால் பாத்திரங்களால் ஓரளவு குறைக்க முடியும். கொட்டகையில் ஈக்கள், கொசுக்கள் பரவாமல் தடுக்க சாணம் சிறுநீர் போன்றவவைகளை அருகில் இருக்காதவாறு அப்புறப்படுத்தி அவ்வப்போது கழுவி கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

5.பாத்திரங்கள் :  பாலில் அதிகிப்படியான நுண்ணுயிரிகள் பால் பாத்திரத்தின் மூலம் தான் சேருகின்றன. சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில், கிருமிகள் பாத்திரத்தில் உள்ள சிறு பள்ளங்கள் மற்றும் விளிம்புகள் ஆகியவற்றில்  இருக்க வாய்ப்புண்டு. எனவே பாலைக் கறப்பதற்கும் சேகரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படும் பாத்திரம,; மடிப்பு, விளிம்பு, பள்ளங்கள் இல்லாமல் ஒரே அமைப்புள்ளதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.
பால் பாத்திரங்களை சுத்தம் செய்ய சோடா உப்பு (றுயளாiபெ ளுழனய) காஸ்டிக் சோடா, டிரை சோடியம் பாஸ்பேட் போன்ற இரசாயண பொருட்களை உபயோகிக்கலாம். பாலில் உள்ள கொழுப்பு, புரதம், சர்க்கரைப் பொருள் ஆகியவைகளைக் கரைத்து நீக்கும் தன்மை கொண்டது. எனவே சூடான தண்ணீரில் வாசிங் சோடாவைக் கரைத்து, அத்தண்ணீரால் பாத்திரத்தை நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு பாத்திரத்தை உபயோகிப்பது சிறந்தது.


6.பால் கறப்பவர் :  பால் கறப்பவா காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பால் கறக்கும் போது தும்முவதாலும் பேசுவாதலும் இக்கிருமிகள் பாலில் சேர வாய்ப்புண்டு. பால் கறப்பவரின் கைகளிலுள்ள நகங்கள் நீண்டிருந்தால் அதில் சேர்ந்துள்ள அழுக்குகள் மூலம் பால் அசுத்தம் அடையலாம். எனவே நகங்களை நறுக்கி, கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து உலர்ந்த சுத்தமான துணியில் துடைத்து அதன்பின் தான் பால் கறத்தலை தொடங்க வேண்டும்.

மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு உற்பத்தி செய்யப்பட்ட சுத்தமான பாலிலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடப்பொருட்களின் (ளுழடனைள ழேவ குயவ – ளுNகு) அளவைக்கொண்டே பண்ணையாளர்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை மூலம் பாலின் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவை அதிகரிக்கலாம்.

பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் :

கோடை காலமான சித்திரை, வைகாசி போன்ற காலங்களில் வெப்பநிலை கூடுதலாக இருக்கும், அப்போது பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் குறைவாக இருக்கும்.

வெயிலில் கலப்பின கறவை மாடுகளை 4 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாலோ, மேய விட்டாலோ பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறையும்.

கன்று ஈன்றபின் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனம் கொடுக்கப்படவேண்டும். அப்படி கொடுக்காமலிருந்தால் பாலில் 0.4 முதல் 0.5 சதவீதம் வரை கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறையும்.

கொட்டகையின் வெப்பநிலையும் 30 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகும் பொழுது கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறைகிறது.

பால் கறக்கும் இடைவெளி 15 மணி நேரத்திற்குமேல் இருக்கக் கூடாது. பாலினை 12 மணி இடைவெளிக்கு ஒரு முறை கறப்பது பால் உற்பத்தி குறையாமல் இருக்கும். பாலை கறக்காமல் வாரத்திற்கொருமுறை மடியில் விட்டுவிடுவதும் பால் உற்பாத்தியும், கொழுப்புச்சத்தின் அளவும் குறைவதற்கான காரணங்களாகும்.

பால் கறக்கும் போது முதலில் கறக்கப்படும் காலில் கொழுப்புச்சத்து சற்றே குறைவாகவும், நடுவில் கறக்கப்படும் பாலில் சத்து அதிகமாகவும், இறுதியில் கறக்கப்படும் பாலில் கொழுப்பு மிக அதிகமாகவும் இருக்கும். எனவே கன்றுகளுக்குத் தேவையான பாலைக் கடைசியில் கறக்கப்படும் பாலில் பொழுப்பு மிக அதிகமாகவும் இருக்கும். எனவே கன்றுகளுக்குத் தேவையான பாலைக் கடைசியில் விடாமல், கநற்தபாலினை கன்றுகளுக்கு பாத்திரத்தில் ஊற்றி குடிக்கச் செய்யவேண்டும். முடியில் குடிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.

பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு குறையாமல் பாதுகாக்க சில வழிமுறைகள் : 

ஜெர்சி இன மாடுகள் அதிக கொழுப்பும், கொழுப்பற்ற திடப்பொருளும் கொண்ட பாலினை தரக்கூடியவை.

பாலினை 12 மணி நேர இடைவெளியில் சரியாக கறக்க வேண்டும். மாடுகளின் பால் உற்பத்தி திறன் நாளுக்கு 15 லிட்டருக்கு மேல் இருக்குமானால் 8 மணி நேர இடைவெளியில் அதாவது தினமும் மூன்று முறை பால் கறப்பதன் மூலம் அதன் உற்பத்தி அதிகரிக்கும்.

கறவை மாடுகளின் மடியில் ஒருவேளைக்கூட பால் தங்காமல் முழுவதும் கறப்பது நன்று.

கால்நடைகளை குளிர்ந்த நீரில் தினசரி மூன்று அல்லது நான்கு முறை குளிப்பாட்ட வேண்டும். ஆதனால் வெப்பம் குறைந்து பால் உற்பத்தி, கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு அதிகரிக்கும், பெரிய பண்ணைகளில் இயந்திரங்கள் மூலம் கறவைமாடுகளின் மேல் நீரினை பனி போல தெளிக்க வைப்பதும் பயனளிக்கும்.

நன்றாக அடர் தீவனம் கொடுத்து வளர்க்கப்பட்ட சினைமாடுகள் மற்ற மாடுகளைவிட அதிக அளவு கொழுப்பும், கொழுப்பற்ற திடப்பொருள்கள் கொண்ட பால் கறப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிகிறது. எனவே கன்று ஈனும் முன்னரும், கன்று ஈன்ற பினனரும் கால்நடைகளுக்கு தேவையான அளவு அடர் தீவனம் கொடுப்பது சிறந்ததாகும்.

மாடுகளை அதிகாலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும். இதனால் வெயில் தாகத்திலிருந்து விடுபட்டு தீவனம் உண்ணும் அளவு குறையாமல் இருக்கும் தவிரவும் கால்நடைகளுக்கு தீவனம், வெயில் வருவதற்கு முன்போ, மாலை நேரத்திலோ அளிக்க வேண்டும்.

பசுந்தீவனத்தை கோடை காலங்களில் கால்நடைகளின் உடல் எடையில் 10 சதவீதம் வரை கொடுப்பது அவசியமானதாகும். இப்பசுந்தீவனத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொடுக்க பால் உற்பத்தி குறையாமல் இருக்கும், மேலும் அவற்றின் இனப்பொருக்க திறன் குறையாமல் இருக்கும்.

உலர்ந்த புல்  தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றின் மேல் நீரை தெளித்து ஈரமாக பசுக்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

கால்நடைகளின் 6 மாத சினைக்காலம் முதல் 3 கிலோ அடர் தீவனம் கொடுத்து சினைமாட்டை நல்ல சதைப்பற்றுடன் வைத்திருந்தால், பால் உற்பத்தியும், பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவம் அதிகமாக இருக்கும் கடைசி 2 மாத சினைக்காலத்தில் தினமும் 2 கிலோ அடர் தீவனம் கொடுக்கப்பட வேண்டும்.

வெயில் நேரங்களில் காற்றோட்டமாக கூரை கொட்டகையில் கட்டி வைக்க வேண்டும். கொளுத்தும் வெயிலில் மேயவிடவேண்டாம்.
சரிவிகித கலப்புத் தீவனம் அளிப்பதன் மூலமும், தேவையான அளவு தீவனம் உட்கொள்ள செய்வதன் மூலமும் பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவை அதிகரிக்கச்செய்யலாம்.

கறவை மாட்டுப் பண்ணையாளர்களும், விவசாய பெருமக்களும் மேற்கூறிய தரமான பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் முறைகளை கருத்தில் கொண்டு கையாண்டால் தங்கள் வாழ்க்கையையும், வருமானத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும்.
தொடர்புக்கு: கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.

தொகுப்பு: மரு.மு.வீரசெல்வம், மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சோ.யோகஷ்பிரியா, மரு.சு.கிருஷ்ணகுமார், மரு.ம.சிவகுமார் மற்றும் மரு.ப.செல்வராஜ்

Trisha & Vishaal pair up for new film | Cine Gossips

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து