முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி விற்பனை மற்றும் கண்காட்சி துவக்கம்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் கலைச்சங்க மைதானத்தில் தேசிய கைத்தறி தினம் 07.08.2017 முன்னிட்டு 19.07.2017 முதல் 21.07.2017 வரை நடைபெறும் கைத்தறி; விற்பனை மற்றும் கண்காட்சியை மாவட்ட கலெக்டர்(பொ)கே.முத்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் 2.50 இலட்சம் கைத்தறி நெசவாளர்களை கொண்டு கலைத்திறனுடன் கைத்தறி துணிகள் உற்பத்தி செய்து மிக உன்னதமான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய அளவில் நேர்த்தியான நவீன யுகத்திற்கு ஏற்றவாறும்இ பாரம்பரியமிக்க அரிய வகையான சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் 1,300 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

 தமிழ்நாடு ஜவுளித் தொழிலில் முதன்மை மாநிலமாக விளங்குவதோடுஇ கிராம மற்றும் நகர்ப்புற மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு அளிக்கிறது. 2015-16-ம் ஆண்டில் ரூ.839.89 கோடி மதிப்பிற்கு கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்து ரூ.1049.54 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்து வருகிறது.வரும் ஆகஸ்டு 07-ம்; தேதி தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்; கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கைத்தறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சியில் காஞ்சிபுரம்இ சேலம் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள் மற்றும் கோயம்புத்தூர் மென் பட்டுப்புடவைகள்இ  திருப்பூர்இ  பரமக்குடிஇ  திண்டுக்கல்  ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி புடவைகள்இ ஈரோடுஇ பவானிஇ சென்னிமலைஇ கரூர் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பெட்சிட் ரகங்கள் துண்டு ரகங்கள் ஜமக்காளம் மற்றும் வீட்டு உபயோக துணி ரகங்கள்இ நாகர்கோவில் துண்டு ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.திருவள்ளுர் மாவட்டத்தில் 19.07.2017 முதல் 21.07.2017 முடிய மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையில் சில குறிப்பிட்ட ரகங்களுக்கு சிறப்பு விற்பனை சலுகையாக (தள்ளுபடி மான்யம் 20மூ + சங்கங்களின் 10மூ கமிஷன்) வழங்கப்படும். எனவே, திருவள்ளுர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு கண்காட்சியை பன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர்(பொ) கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்(பயிற்சி)பவன்குமார்.க.கிரியப்பனவர்,திருவள்ளுர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் சா.ஆத்மநாபன்; மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து