முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க அரசு மீது நம்பிக்கை இல்லை: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      அரசியல்
Image Unavailable

மும்பை. மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் ஆளும் பா.ஜ.க அரசுகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

வரும் 27-ம் தேதி உத்தவ் தாக்கரேவின் 57-வது பிறந்த நாள். இதையொட்டி சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

என்னைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில் மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் ஆட்சி நடத்தும் பா.ஜ.க அரசுகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்.  - உத்தவ் தாக்கரே

ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை சிவசேனா முன்பே சுட்டிக் காட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்தில் சிறு வணிகர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து நான் பேசவில்லை. அரசு இயந்திரத்தின் நிர்வாக குளறுபடிகளையே சுட்டிக் காட்டுகிறேன். என்னைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில் மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் ஆட்சி நடத்தும் பா.ஜ.க அரசுகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து