முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் ரூ.35 லட்சத்தில் நடமாடும் கதர் அங்காடி

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      நீலகிரி

ஊட்டியில் ரூ.35.29 லட்சத்தில் நடமாடும் கதர் அங்காடி செயல்படுத்த உள்ளதாக ஏடுகள் குழு தலைவர் செந்தில்பாலாஜி கூறினார்.

                            ஆய்வுக்கூட்டம்


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவர் செந்தில்பாலாஜி தலைமையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏடுகள் குழு தலைவர் பேசியதாவது-
நம்முடைய நாட்டு மக்கள் முன்னேற மறைந்த முதல்வர் அம்மாவின் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேர்தல் காலத்தில் அளிக்க வாக்குறுதிகளை விரைவாக நம் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்ந நாட்டில் ஏழை_எளியோர் முன்னேற்றம் பெறவேண்டும் என்பதும், அறியாமையை ஒளித்தும், வறுமையை ஒளித்தும் நாட்டு மக்களை ஏழ்மை நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே மறைந்த முதல்வர் அம்மாவின் கனவாகும்.

தள்ளுபடி மானியம்


 ஊட்டி நகரில் கதர் அங்காடியினை சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.41.15 லட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்திடவும், மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் அவர்களை கவரும் வகையில் கதர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், அதன் மூலம் கதர் கிராமப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் அறிந்திடும் வகையில் ஊட்டியில் நடமாடும் கதர் அங்காடி செயல்படுத்திட ரூ.35.29 லட்சம் மதிப்பீட்டில் திட்ட எடுத்துரையும் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கதர் மற்றும் கிராமத் தொழில் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  கதர் வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் கீழ் இயங்கும் 12 கூட்டுறவு சங்கங்கள் ரூ.60 லட்சம் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டுள்ளது. 68 சர்வோதய சங்கங்களுக்கு ரூ.34.74 கோடி தள்ளுபடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. பட்டுநெசவு செய்யும் கதர்வாரிய நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களை புதுப்பிக்க ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற பேரவு முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, ஆர்.பாலசுப்பிரமணி, ஓய்.பிரகாஷ், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.மூர்த்தி, வி.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து