முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கற்கும் பாரதம் திட்டம் அடிப்படை எழுத்து தேர்வு ஆயத்தப்பணிக்கான ஆய்வுக் கூட்டம் : கலெக்டர் க.லட்சுமி பிரியா தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      அரியலூர்

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கற்கும் பாரதம் திட்டம் அடிப்படை எழுத்து தேர்வு ஆயத்தப்பணிக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைமையில் நடைபெற்றது.

எழுத்துத்தேர்வு

இக்கூட்டத்தில், கற்போர்களுக்கான எழுத்துத்தேர்வு புத்தகங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கி தெரிவித்ததாவது:-தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக கற்கும் பாரதம் திட்டம் அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் செயல்படுகிறது. அனைத்து வயதுவந்தோர் கல்வி மையங்களில் பயிலும் கற்போர்களுக்கு தேசிய திறந்தநிலைப் பள்ளி வாயிலாக அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 20.08.2017 நடைபெறவுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் கற்போர்களுக்கான எழுத்தறிவு தேர்வு இதுவரை 80,000 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், இம்மாவட்டத்தில் 65 கிராம பஞ்சாயத்துகளில் 65 தேர்வு மையங்களில் 692 பயனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வினை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை தவறாது பின்பற்றவும், தேர்வுப் பணிகளை துரிதபடுத்தவும் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர், மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் (கற்கும் பாதரம் திட்டம்) ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்;, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அனந்தநாராயணன், மாவட்ட கல்வி அலுவலர் கலைமதி, திட்ட ஒருங்கிணைப்பாளர் (கற்கும்பாரதம்திட்டம்) ஜாக்குலின் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து