முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலத்தானியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டடிம் கட்ட ரூ.1 கோடி மதிப்பில் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது : கலெக்டர் சு.கணேஷ் தகவல்

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      புதுக்கோட்டை

 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மேலத்தானியம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட மேலத்தானியம் முகம்மதுசித்திக் என்பவரது மனைவி ரகுமத்துநிஷா என்ற ரகுமத்து அம்மாள் என்பவர் 0.30.0ஏர்ஸ் (74 சென்ட்) நிலத்திற்குரிய ஆவணத்தை மாவட்ட கலெக்டர் சு.கணேஷிடம் வழங்கினார்.

 ஆவணம்

 பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை சுகாதார மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், மேலத்தானியம் கிராமத்தில் 28.01.2017 அன்று முதல் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் ஊராட்சி ஒன்றிய சமுதாயகூட கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது இவற்றிற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தினசரி 90 நபர்களுக்கு மேல் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இதில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுனர், மருத்துவமனை பணியாளர் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

 இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு போதுமான இடம் கிடைக்காத சூழ்நிலையில் மேலத்தானியம் கிராமத்தை சேர்ந்த முகம்மதுசித்திக் என்பவரது மனைவி ரகுமத்துநிஷா என்ற ரகுமத்து அம்மாள் என்பவர் 0.30.0ஏர்ஸ் (74 சென்ட்) நிலத்தினை நன்கொடையாக அரசுக்கு வழங்கியுள்ளார்கள். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும். இந்த நிலத்தை வழங்கிய ரகுமத்துநிஷா என்ற ரகுமத்து அம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைப் போன்று தமிழக அரசின் இத்தகைய திட்டங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவ முன்வர வேண்டும். மேலும் விரைவில் இந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமான கட்டடம் எழிலுற கட்டப்படவுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.பரணிதரன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திலகவதிமுருகேசன், ஜமாத் பொருளாளர் அபிபுல்லா, மேலத்தானியம் கிராமத்தார்கள் மலைச்சாமி, வெள்ளைச்சாமி மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து