முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வசக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஐந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      சென்னை
Image Unavailable

 திருவொற்றியூரை அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ., பகுதியில் வீற்றியிருக்கும் அருள்மிகு சர்வசக்தி மாரியம்மன் ஆலயத்தின் 18ம் ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் கூழ்வார்த்தல் விழா அ.தி.மு.க பிரமுகர் மாத்தூர் கே.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.

அன்னதானம்

விழாவில் சர்வசக்தி மாரியம்மனுக்கு மகாஅபிஷேகம், கணபதியாகம், அம்மன் பரிவாரமூர்த்திகளுக்கு காப்புகட்டுதல், மாத்தூர் பொன்னியம்மன் கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு வீதிஉலா வருதல், அம்மனை பதிவிளக்கில் அமர்த்தி பம்பை உடுக்கை வர்ணித்தல், சிறப்பு மகாஅபிஷேகம், தீபாரதணை, ஆலயத்தில் கரகம் வலம்வருதல், கூழ்வார்த்தல், அம்மன் வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மூன்று நாள் விழாவில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முடிவில் தமிழ்நெஞ்சனின் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தலைப்பாக பெற்றோர்களுக்கு எப்போதும் துணை புரிபவர்கள் ஆண்பிள்ளைகளா? பெண்பிள்ளைகளா? என்ற பட்டிமன்றம் நடந்தது. முன்னதாக இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் டாக்டர்.பி.வேணுகோபால் எம்.பி., முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம், அ.தி.மு.க வட்ட செயலாளர் கே.பிரதாபன், முன்னாள் கவுன்சிலர் கே.பார்த்தீபன், கே.தாமரைசெல்வம், எஸ்.தங்ககுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 விழாவிற்கான ஏற்பாடுகளை குழுத்தலைவர் கே.துரைராஜ் தலைமையில் டி.கோவிந்தன், ஏ.வி.ஆனந்தன், என்.சந்தானம், டி.என்.ஏழுமலை, டி.ஏகாம்பரம், ஆர்.செல்லப்பா, ஆர்.வெங்கடேஷன், எஸ்.ஆசைதம்பி, எஸ்.சுந்தரேசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் அம்மன் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து