முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சிளம் குழந்தையை கொரியரில் அனுப்பிய பெற்றோர்

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சீனாவில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் அனாதை ஆசிரமத்திற்கு கொரியரில் பெற்றோரே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள புஷோ நகரைச் சேர்ந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் வீட்டிலேயே பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த தம்பதி குழந்தையை விரும்பவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமால் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்துள்ளனர்.

கொரியரில் பார்சல்
பின்னர் கொரியர் நிறுவனம் ஒன்றுக்கு பார்சல் இருப்பதாக கூறி அழைப்பு விடுத்தது அந்த தம்பதி. இதையடுத்து பார்சல் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

சந்தேகத்துடன் பெற்ற இளைஞர்
அப்போது அந்த இளைஞரிடம் பார்சலை ஒப்படைத்த அந்த தம்பதி அதனை பார்க்க கூடாது என கட்டளையிட்டனர். இதையடுத்து சந்தேகத்துடனே பார்சலை பெற்றுச்சென்றுள்ளார் அந்த இளைஞர்.

பார்சலில் அழு குரல்
பாதி தூரம் கடந்தப் பின் பார்சலில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் பார்சலை பிரித்து பார்த்துள்ளார்.

பார்சலில் பச்சிளம் குழந்தை
அப்போது அதில் பிறந்த பச்சிளம் குழந்தையை இருப்பதைக் கண்டு திடுக்கிட்ட அவர் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மக்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து