முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் வீசப்பட்ட 180 பயணிகள்: 6 பேர் பலி சோமாலியா கொள்ளையர்கள் அட்டகாசம்

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

துபாய்:  ஏமன் கடலில் சென்று கொண்டிருந்த கப்பலில் கொள்ளையடித்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் 180 பயணிகளைப் பிடித்து கடலில் தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த பயணிகள் அனைவருமே எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஏமன் சென்று கொண்டிருந்தனர். அப்போது சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை மடக்கினர். அதில் ஏறிக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

தகவல் கிடைத்து சர்வதேச ரோந்துப் படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்து கோபமடைந்த கடற்கொள்ளையர்கள், கப்பலில் இருந்த 180 பயணிகளையும் கடலில் பிடித்துத் தள்ளி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

6 பேர் பலி
இதைத் தொடர்ந்து சர்வதேச படையினர் மீட்புப் பணியில் குதித்தனர். கடலில் தள்ளி விடப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். 13 பேரைக் காணவில்லை. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய சிலர் ஏமன் நாட்டின் ஷப்வா மாகாண கடலோரத்தில் கரை ஏறி தப்பினர்.

50 பேர் பலி
கடந்த புதன்கிழமையன்று இப்படித்தான் ஏமன் நாட்டில் வசித்து வந்த 120க்கும் மேற்பட்ட சோமாலியா மற்றும் எத்தியோப்பியர்கள் வேறு நாட்டுக்குச் செல்ல படகில் வந்தனர். அவர்கள் வந்த படகு கடலில் மூழ்கியதில் 50 பேர் உயிரிழந்தனர். 22 பேரைக் காணவில்லை. இந்த நிலையில் கடற்கொள்ளையர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமனிலிருந்து வெளியேறி வருவோரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிக அளவில் வெளியேறி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து