முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடனான டோக்லம் எல்லைபிரச்சினைக்கு அமைதியாக தீர்வுகாணப்படும்: பூட்டான்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

காத்மாண்டு, சீனாவுடனான டோக்லம் எல்லைப்பிரச்சினைக்கு அமைதியாகவும் சுமூகமாகவும் தீர்வுகாணப்படும் என்று பூட்டான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோக்லம் பகுதி வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் டோக்லம் பகுதியில் இந்திய-சீன ராணுவம் குவிக்கப்பட்டு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சீனா மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் வங்கக்கடல் பகுதி நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு   இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று காத்மாண்டுவுக்கு சென்றார். மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பூட்டான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டம்சோ டோர்ஜியை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டம்சோ டோர்ஜி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகியில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோக்லம் பிரச்சினைக்கு சீனாவுடன் சுமூகமான தீர்வுகாணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

டோக்லம் பகுதியானது எங்களுக்குத்தான் சொந்தம் என்பதை பூட்டான் ஒப்புக்கொண்டுள்ளது என்று சீனா கூறிவந்தது. ஆனால் அதற்கான ஆதாரம் எதையும் சீனா காட்டவில்லை. பூட்டான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுஷ்மா சுவராஜ் பேசிய விபரம் குறித்து எதுவும் இந்திய தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா நேரத்திலும் நெருங்கிய நட்பு நாடும் அண்டை நாடான பூட்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் டம்சோ டோர்ஜியை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசியதையும் அவர்கள் சந்திப்பு படத்தையும் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இரண்டு அமைச்சர்களும் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிடையே தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று இந்தியாவின் வடக்கு பிராந்திய வெளியுறவுத்துறை இணை செயலாளர் சுதாகர் தலாலே தெரிவித்தார். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் வசந்த் சேனநாயகேவையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை இடையே உள்ள இருதரப்பு பிரச்சினைகள், இருநாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் கலாசார உறவை வளர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று தலாலே தெரிவித்தார்.

தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா அமைப்பில் இந்தியா, இலங்கை, பூட்டான், தாய்லாந்து மியான்மர்,நேபாளம் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் பகுதியில் உள்ள வளத்தை எடுத்து பயன்படுத்த வேண்டும் தலாலே மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து