முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துமகா சமுத்திரம் மீது குறிவைக்கும் சீனா

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், இந்துமகா சமுத்திர கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என்று சீனா வெளிப்படையாக கூறியுள்ளது.

வங்கக்கடல்-அரபு கடல், இந்துமகா சமுத்திரம் ஆகிய மூன்றும் கண்ணியாகுமரியில் சந்திக்கிறது. இந்துமகா சமுத்திரப்பகுதியானது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக முக்கியமான கடல் பகுதியாக இருக்கிறது. இந்த பகுதிக்கும் சீனாவுக்கும் வெகுதூரமாகும். தற்போது இந்துமகா சமுத்திர கடல் பகுதியானது சர்வதேச சமுதாயத்திற்கு சொந்தமானது என்றும் அந்த பகுதியை பாதுகாப்பதில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா கப்பல் படையும் விமானப்படையும் தயாராக இருப்பதாக அந்தநாடு கூறியுள்ளது.

சீனா பத்திரிகையாளர்கள் அழைப்பின்பேரில் இந்திய பத்திரிகையாளர்கள் சீனாவுக்கு சென்றுள்ளனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீன மக்கள் ராணுவ உயரதிகாரி லி லீயை இந்திய பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது டோக்லம் பகுதி எங்கள் நாட்டுடையது என்றும் இதை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றும் சரியான நேரத்தில் பதிலடி இருக்கும் என்றும் இந்தியாவை மிரட்டும் வகையில் லீ பேட்டி அளித்தார். அதனையெடுத்து சீனாவின் பாதுகாப்பு ஆலோசகரை இந்திய பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அவர் பேட்டி அளிக்கையில் டோக்லம் பிரச்சினைக்கு இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். கடந்த 1890-ம் ஆண்டு சீனாவுக்கும் பிரிட்டீஷாருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை வைத்து டோக்லம் பகுதியை சீனா உரிமை கொண்டாடக்கூடாது என்றும் அப்போது இருந்த சீனா வேறு, தற்போது உள்ள சீனா வேறு என்று அவர் நாகரீகமாக பதில் அளித்தார்.

சீனாவின் கடற்கரை நகரான ஜன்ஜியாங் நகருக்கு இந்திய பத்திரிகையாளர்கள் சென்றனர். அங்கு தெற்கு சீனா விமானப்படையின் துணை ஜெனரல் அதிகாரி லியாங் தியாஜூனை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தெற்கு சீன கடல்பகுதியில் ராணுவ வலிமையை பெருக்கியுள்ள சீனா, தற்போது இந்துமகா சமுத்திரப்பகுதியில் சீன நீர்மூழ்கிக்கப்பல்களும் போர் விமானங்களும் அடிக்கடி நடமாடுவது ஏன் என்று வினா எழுப்பினர். அதற்கு பதில் லியாங், இந்துமகா சமுத்திரம் பகுதியானது சர்வதேச சமுதாயத்திற்கு சொந்தமானது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது என்று வெளிப்படையாக கூறினார். சீனாவிடம் 300-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளன. இவைகள் அணுஆயுதங்களை ஏந்தி சென்று தாக்க வல்லது. தெற்கு சீன கடல் பகுதியானது சர்வதேச சமுதாயத்திற்கு சொந்தமானதாகும். இந்த பகுதி வழியாகத்தான் வர்த்தகம் தொடர்பாக உலக நாடுகளின் சரக்கு விமானங்களும் சரக்கு கப்பல்களும் அதிக அளவு சென்று வருகின்றன. அந்த கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்த பகுதியில் செயற்கை தீவை உருவாக்கி அதில் ராணுவத்தை சீனா நிறுத்தியுள்ளது. இதற்கு பிலிப்பைன்ஸ்,வியட்னாம் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனாவோ பாதுகாப்புக்காக செயற்கை தீவு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுவதோடு தென்னாப்பிரிக்காவுக்கு அருகிலும் ராணுவ தளத்தை சீனா நிறுத்தியுள்ளது. 

இந்துமாக சமுத்திர பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்களும் விமானங்களும் வந்து போவதற்கு இந்தியா பெரும் கவலை கொண்டுள்ளது. அதனால் இந்த பகுதியில் பாதுகாப்பை இந்தியா அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து