முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரதினத்தையொட்டி கிராமசபை கூட்டம் ராமநாதபுரம் கலெக்;டர் நடராஜன் கலந்து கொண்டார்

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினத்தையொட்டி வன்னிவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் கலந்து கொண்டார்.
 ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சித்தூர் ஊராட்சி, வன்னிவயல் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- அன்னிர் ஆதிக்கத்திலிருந்த நம்நாடு விடுதலை பெறுவதற்காக நமது தேசத்தின் விடுதலை இயக்க தலைவர்கள் 1942-ல் வெள்ளையனே வெளியேறு என்ற மாபெரும் இயக்கத்தை முன்னின்று நடத்தியதால் நம் இந்திய திருநாடு 1947-ல் விடுதலை பெற்றது. இதற்காக  பலர் தங்கள் உயிரை தியாகங்கள் செய்துள்ளனர்.எனவே, இந்த சுதந்திர தினவிழா நன்னாளில்,  வெள்ளையனே வெளியேறு என்ற மாபெரும் இயக்கம்  துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த இனிய வேலையில் அதனை போற்றி கொண்டாடவேண்டியதும், இந்திய விடுதலைக்காக உயிர் தியாகங்கள் செய்துள்ளவர்களை நினைவு கூர்வதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
இக்கிராம சபை கூட்டத்தில்  கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட அறிக்கை, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதன் செலவினம், அந்தியோதயா இயக்கம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற  ஊராட்சிகளை பிரகடனம் செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயலாக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நியாயவிலை கடைகள் செயல்பாடு குறித்த சமூக தணிக்கை,  கிராம ஊராட்சிகளில்  வரும் காலங்களில் பேரிடர் அபாய குறைப்பு பணிகள் முன்னுரிமை, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்தல் குறித்து திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் ஊரக பகுதிகளில் உள்ள பொது மக்கள் அரசு செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு பெற்று, அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் தலைமையில், ‘2022-க்குள் புதிய இந்தியாவை படைப்பதல்” குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் கிராம பொது மக்கள் பங்கேற்ற ‘திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமம்” குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
அதன்பிறகு, ராமநாதபுரம் குண்டுகரை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லம்மாள், வட்டாட்சியர் சன்முக சுந்தரம் உட்பட அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து