முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா ஏராளமான அனைத்து மத பக்தர்கள் கலந்து கொண்டனர்

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் பல்லாயிரக்கணக்காக அனைத்து மத பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது முஸ்லீம்களின் புண்ணியதலமான ஏர்வாடி தர்கா. இங்கு மகான் குத்பு சுல்த்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார். இந்த மகானின் சமாதியில் புனித சந்தனம் பூசும் உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா கடந்த பல நூற்றாண்டுகளாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு 843-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் குடியிருக்கும் தைக்கா பகுதியில் இருந்து யானை, குதிரைகளில் இளம்பச்சை கொடிகள் ஏந்தி வர தர்காவை நோக்கி புறப்பட்டது.

ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் அனைத்து மத பக்தர்களின் ஆட்டம், பாட்டத்துடன் இரவை பகலாக்கும் வண்ண ஒளியில் சந்தனக்கூடு அழகுற வந்தது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக திகழ்ந்த சந்தனக்கூடு பல்லாயிரக்கணக்கான அனைத்து மத பக்தர்கள் சூழ்ந்திருக்க தர்காவை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து வெள்ளிப்பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனித சந்தனம் மகானின் சமாதியில் பூசப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் தேவதாஸ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து