முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டம்

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

தேனி - பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஊராட்சிகளிலும்  குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு தடுப்பு, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், சுகாதாரம், மகளிர் திட்டம், இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
 வடபுதுப்பட்டி : வடபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் கணபதி தீர்மானங்களை வாசித்தார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மேற்பார்வையிட்டார். சட்ட மையம் சார்பில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.  150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 மேல்மங்கலம் : மேல்மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் கோபாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். பெரியகுளம் ஒன்றிய தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மேற்பார்வையிட்டார். 170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறந்த செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 கீழவடகரை : கீழவடகரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் 227 பேர் கலந்து கொண்டனர். தீர்மானங்களை செயலர் ஜெயபாண்டி வாசித்தார். ஊராட்சி ஒன்றிய உதவியாளர் தங்கம் மேற்பார்வையிட்டார்.
 குள்ளப்புரம் : குள்ளப்புரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் கார்த்திக் மேற்பார்வையிட்டார். தீர்மானங்களை செயலர் ஜெயபாண்டி வாசித்தார். 211 பேர் கலந்து கொண்டனர்.
 அழகர்நாயக்கன்பட்டி : கிராமசபை கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையிட்டார். 116 பேர் கலந்து கொண்டனர். செயலர் மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி ஆய்வு மேற்கொண்டார்.
 டி.வாடிப்பட்டி : டி.வாடிப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் பாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தர் பாலமுருகன் மேற்பார்வையிட்டார். 117 பேர் கலந்து கொண்டனர்.
 எண்டப்புளி : எண்டப்புளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சி.பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவராஜா மேற்பார்வையிட்டார். செயலர் முத்துச்செல்வம் தீர்மானங்களை வாசித்தார்.  ஆரோக்கியமாதா நகர், நேருநகர், புதுப்பட்டி பகுதிகளில் குடிநீர் பைப் அமைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 லெட்சுமிபுரம் : லெட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி மேற்பார்வையிட்டார். கிராம வளர்ச்சி அறிக்கை உள்ளிட்ட தீர்மானங்களை செயலர் லெனின் வாசித்தார். சிறப்பு தீர்மானங்களாக ஊராட்சி கிணற்றிலிருந்து 200 மீட்டருக்குள் ஆழ்துளை குழாய் அமைக்கவோ, கிணறு அமைக்கவோ கூடாது என்றும், வறட்டாறை ஓடையாக மாற்றியது குறித்தும், மீண்டும் வறட்டாறை ஆறாக மாற்றவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து அதற்கான விளக்கத்தை அடுத்து வரும் கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குன்னூர் ஆற்றுப்பகுதியிலிருந்து லெட்சுமிபுரம் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வர நிதி ஒதுக்கீடு செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கதிர்காமு அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 அனைத்து ஊராட்சிளிலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து