முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எரிபொருள்களின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.- மதுரை பாண்டியன் ஹோட்டலில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எரிபொருள்களின் சிக்கனம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்  துவக்கி வைத்தார்.
 இந்த பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பேசியதாவது:
 நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நடுதத்தர நிறுவனங்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் (ஆளுஆநுள) தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் வேளாண்மைத்துறைக்கு அடுத்தப்படியாக தொழில்துறை தான் அதிக வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய துறையாக விளங்குகிறது.  2006-07ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தொழில் துறை மூலம் 3.6 கோடி மக்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.  31.03.2017ன்படி தமிழகத்தில் 15.61 இலட்சம் பதிவு செய்யப்பட்ட நடுத்தர, சிறு மற்றும் குறு நிறுவனங்கள் (ஆளுஆநுள) உள்ளன.  இதன் மூலம் 99.78 இலட்சம் நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 
 தமிழகத்தில் இந்நிறுவனங்கள் (ஆளுஆநுள) தொடங்குவதற்கென ரூ.1,68,331 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.  தொழிற்சாலைகளில் மிக முக்கியமானது எரிசக்தி ஆகும்.  இந்த எரிசக்தியானது நமக்கு மிகவும் அரிதாய் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.  இதனை பாதுகாப்பது ஒவ்வொரு தொழிற்சாலைகளின் முக்கியப்பணியாகும்.  ஏனென்றால் இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இயற்கையின் சீற்றத்தாலும் நமக்கு கிடைக்கக் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.  நமது நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் 15.24 சதவீதம் நுண் நிறுவனங்கள், 9.21 சதவீதம் நடுத்தர நிறுவனங்கள், 9.60 சதவீதம் சிறு நிறுவனங்கள் உள்ளன. 
 இத்தொழிற்சாலைகளில் எரிபொருளை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கிய பங்கு என்னவென்றால் சரியான மேற்பார்வை, போதுமான பராமரிப்பு, தேவைகளை குறைப்பது, சக்தி வாய்ந்த இயந்திரங்கள் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் எரிசக்தியினையும், நீரினை சேமிக்க சரியான மோட்டார் மற்றும் பம்ப், சரியான குழாய் வசதி உள்ளிட்டவை மூலம் சேமிக்கலாம்.  இதனை தொழில் முதலீட்டாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு எரிசக்தியை சேமித்து நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முனைவர்.சாந்தகுமார், மடீட்சியா தலைவர் முராரி, உதவி பொது மேலாளர், எஸ்.ஐ.டி.பி.ஐ மதுரை தோட்டா வித்யாசாகர், கூடுதல் இயக்குநர் (ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு) அஜீத்குமார், கே.எல்.என். பொறியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர்.வெங்கட்நாராயணன், உதவி இயக்குநர் (ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு) ராஜேஷ்மோகன், உதவி இயக்குநர் (மாவட்ட தொழில் மையம்) சிவசங்கரன், தொழில் முதலீட்டாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து