முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராசர் பல்கலை.யில் எம்.எஸ்.சி. உயிரிதொழில்நுட்பவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழா துணை வேந்தர் பி.பி.செல்லத்துரை தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி.உயிரிதொழில்நுட்பவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விழா துணை வேந்தர் பி.பி.செல்லத்துரை தலைமையில் நடந்தது.
மதுரை காமராசர் பல்கலையில் பல்கலை உதவியுடன் இயங்க இருக்கும் முதுநிலை இரண்டாண்டு எம்.எஸ்.சி. உயிரிதொழில்நுட்பவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று அதன் ஆரம்ப விழா நேற்று பல்கலையின் துணை வேந்தர் பேரா. முனைவர். பி.பி.செல்லதுரை தலைமையில், பல்கலைகழக உயிரிதொழில்நுட்பவியல் துறையில் நடைபெற்றது. துறையின் தலைவி பேரா. அனிதா சிரோன்மணீ வரவேற்ப்புரையாற்றினார்.
விழாவில் துணை வேந்தர் பி.பி.செல்லத்துரை பேசியதாவது:-
புதிய மாணவர்களை வாழ்த்தி உயிரிதொழில்நுட்பவியல் துறையின் கடந்த கால சாதனைகள் மற்றும் மகத்துவங்களை நினைவுகூர்ந்தார். சாதனைக்கான முழு அற்பனிப்புடன் செயல்படும் அனைவருக்கும் இப்பல்கலை அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். மேலும் பல்கலைகழக பதிவாளர் பேரா. ஏ. சின்னையா வாழ்த்துரையாற்றினார். அவரை தொடர்ந்து உயிரிதொழில்நுட்பவியல் துறையின் மூத்த பேராசிரியரும் விஞ்ஞானியுமான பேரா. மு. வேலுதம்பி மாணவர்களை ஊக்குவிக்கும் முறையில் பேசி, தேசிய அளவில் உயிரிதொழில்நுட்பவியலின் பல்வேறு பரிமாணங்களையும் இத்துறை கடந்துவந்த பாதைகளையும் குறித்து விவரித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலை ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பேரா. ராமகிருஷ்ணன், பல்கலை தேர்வானையர் பேரா. ஆண்டியப்பன்,தொலைநிலைக் கல்வி இயக்குனர் பேரா. கலைகச்செல்வன், பல்கலை சிறப்பு அதிகாரி முனைவர் குமரேசன் மற்றும் கல்லூரி மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குனர் பேரா. செல்வம் ஆகியோர் பங்குபெற்றனர். தாவர உயிரிதொழில்நுட்பவியல் துறையின் தலைவர் முனைவர் கணேஷ் நன்றியுரை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து