முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்மாய்களில் உடைப்பு ஏற்படுவதை தடுத்திட 24 மணிநேரமும் கண்காணிப்பு திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் தகவல்

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தொடர்மழை காரணமாக திருமங்கலம் தாலுகாவிலுள்ள கண்மாய்களில் உடைப்பு ஏற்படுவதை தடுத்திடும் வகையில் 24மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருமங்கலம் வட்டாட்சியர் திருமதி.நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக திருமங்கலம் பகுதியிலுள்ள சில கண்மாய்கள் மழைநீரால் வேகமாக நிரம்பி வருகிறது.இதனிடையே சாத்தங்குடி அருகேயுள்ள புலியூர் கண்மாயில் உடைப்பு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் உடனடியாக சீரமைக்கப்பட்டது.இதையடுத்து திருமங்கலம் தாலுகாவில் உள்ள கண்மாய்களில் உடைப்பு ஏற்படுவதை தடுத்திட 24மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டாட்சியர் திருமதி.நாகரத்தினம் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்: திருமங்கலம் தாலுகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிரம்பி வரும் கண்மாய்களில் உடைப்பு ஏற்படுவதை தடுத்திட வருவாய்துறை,பொதுப்பணித்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறை ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது.சேதங்களை தவிர்த்திடும் பணிகளுக்காக இயந்திரங்களுடன்,மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளின் மூலம் கண்மாய்களில் ஏற்படும் உடைப்புகளை தடுத்து அதனால் வரும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாத்திடலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து