முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா -காங்.தலைவர்கள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா  மற்றும அக்கட்சியின் தலைவர்கள்  ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் ராஜீவ் பிறந்த நாளான நேற்று ட்விட்டரில் குறிப்பிட்டு நினைவு கூர்ந்தார். ராஜீவ் காந்தி 1944ம்  ஆண்டில் ஆகஸ்ட் 20 ம் தேதி பிறந்தார். அவர் இந்தியப் பிரதமராக 1984 முதல் 1989 வரை பணியாற்றினார். 1991 மே 21 அன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்துள்ள ட்வீட்டர் செய்தியில் , ''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழாவில், நாம்  அவரை மறக்காமல் நினைவில் நிறுத்துவோம், நாட்டிற்கான அவரது பங்களிப்பை நினைவுகூர்வோம்.'' என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா வதேரா, ராபர்ட் வதேரா பிரியங்கா மகள் மிராயா ஆகிய ராஜீவ் காந்தி குடும்பத்தினரும் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் வருகை தந்து ராஜீவ்காந்தி சமாதியில் மீது மலர் தூவி மரியாதை செலுத்தினர். நேற்று ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் காங்கிரஸ் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து