முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்றும் இளமை தரும் சப்போட்டா பழம்

திங்கட்கிழமை, 28 ஆகஸ்ட் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

சப்போட்டாப் பழம் பழுப்பு நிறத்தில் உருளைக் கிழங்கு வடிவில் காணப் படும். சப்போட்டா காயாக இருக்கும் போது சாப்பிட முடியாது. நன்கு பழுத்த பிறகே சாப்பிட முடியும். உள்ளே அவரை விதைபோல் கறுப்பு நிற விதைகள் இருக்கும். அவற்றை நீக்கி விட்டுச் சாப்பிட வேண்டும். அச்சரஸ் சப்போட்டா என்றும் சாபோடில்லா என்றும் இதை ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.

நல்ல எனர்ஜியை கொடுக்கக் கூடிய ஆற்றல் மிக்கதாக சப்போட்டா விளங்குகிறது. 100 கிராம் சப்போட்டாவிலே 83 கிராம் கலோரி சத்துகள் அடங்கியுள்ளன. வைட்டமின்கள், தாது பொருட்கள், அமினோ அமிலங்கள் இவற்றுடன் ஆல்கலாய்டுகளையும் சப்போட்டா பெற்றிருக்கிறது.

சத்தான பழம் என்று தான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டாப் பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

100 கிராம் சப்போட்டாப் பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லி கிராம் பாஸ்பரசும் உள்ளது.  சப்போட்டா அதிக மருத்துவ குணமும் எளிமையாக அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கும். கலோரிகள் நிறைந்தது. கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது.

தினமும் இரண்டு சப்போட்டாப் பழம் சாப் பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவடையும். சருமம் பளபளப்பாகும்.  சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டாப் பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் இரண்டு பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

சப்போட்டா பழத்தில் டேனிப் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருள் அதிகம் காணப்படுகிறது. இது நோய் தடுப்பு பொருளாக செயல்படுகிறது. உடலில் புற்று நோய்களை உருவாக்கக் கூடிய நச்சு கழிவுகளை நீக்கக் கூடியதாகவும் இது விளங்குகிறது. மேலும் நோய் கிருமிகளை உடலை அண்ட விடாமல் தடுக்கும் சக்தியும் சப்போட்டா பழத்திற்கு உள்ளது.

வயதான காலத்திலும், பார்வை மேம்படுத்தப்படும் குளுக்கோஸ் அதிக அளவு உள்ளதால் உடலுக்கு அதிக ஆற்றலைக் தருகிறது. உடல் அலர்ஜியை எதிர்க்கும் திறன் கொண்டது. உணவுக் குழாயை சுழற்சி சரி செய்வதன் மூலம் மலச்சிக்கலுக்கு தீர்வு காண்கின்றது. குறிப்பிட்ட சில புற்றுநோய்களை தடுக்கும். பளபளக்கும் கூந்தலுக்கும், பொடுகு தொல்லை, முடி உதிர்வதை தடுக்கும், எலும்பை ஆரோக்கியமாக்க உதவும், நார்ச்சத்து அதிகமுள்ளதால் சிறந்த மலமிலக்கி, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு சிறந்தது.

இரத்த இலப்பை நிறுத்தும் குணம் கொண்டது. மூல வியாதி காயங்களால் ஏற்படும் இரத்த போக்கிற்கு பெரும் உதவி புரிகிறது. ஒருவித மயக்க தன்மை கொண்டதால், மன அழுத்தம், தூக்கமின்மை, நரம்புகளை சுமையடைய செய்யும். வைட்டமின் இ சத்துள்ளதால் சருமம் பளபளக்கும். சப்போட்டா விதையின் எண்ணை தலைமுடி உதிர்வதை தடுக்கும். ஆண்டி ஆக்சிடன்ட் அதிக அளவு உள்ளதால் சருமத்தின் சுருக்கங்கள் மறையும்.

சப்போட்டாவில் கால்சியச்சத்து அதிகமாக இருப்பதால் அதைச் சாப்பிட் டால் உடல் வலிமை பெறும்.  மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சப்போட்டாப் பழம் சாப்பிட்டு வரவேண்டும். அப்போது நோயின் கடுமை கட்டுப்பட்டு அதிகத் தொந்தரவு ஏற் படாது.  தொண்டைப்புண், வறட்டு இருமல், நாக்கு வறட்சி போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் காலையிலும், மாலையிலும் சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும். 

சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால் அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் சப்போட்டாப் பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது. சப்போட்டா ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு ஏஜென்ட் ஆகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் செரிமானப் பாதையை சரிசெய்வதன் மூலம் அது உணவுக் குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது. வைட்டமின்கள் ‘ஏ’ மற்றும் ‘பி’ சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது.

மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் புற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன.  இத்தகைய கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்து காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது. சப்போட்டாப் பழத்தில் நார்ச்சத்து (5.6ஃ100 கிராம்) அதிக அளவில் காணப்படுகிறது.  இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மல மிளக்கியாகக் கருதப்படு கிறது.

மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து குடலை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது. கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிக அளவு கொண்ட சப்போட்டாப் பழம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.  இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற மற்ற கர்ப்ப அறி குறிகளைக் குறைப்பதில் உதவுகிறது. சப்போட்டாவின் மூலிகையானது ரத்த இழப்பை நிறுத்தும். அதாவது அதன் கசிவின்மையை மேம்படுத்தும் பண்புகள் கொண்டுள்ளவை என்று அறியப்படுகிறது.

பாலிஃபீனாலிக் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதன் காரணமாக, சப்போட்டா பல வைரஸ் எதிர்ப்பு, ஓட்டுண்ணிகளின் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மனித உடலில் நுழையும் பாக்டீரியாக்களைத் தடுக்க உதவுகிறது. 

மேலும் இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்து, போலேட், நியா சின் மற்றும் பேண்டோதெனிக் அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறை யின் செயல்பாட்டை அதிகரித்து அதே சமயம் அதிலிருக்கும் வைட்டமின் ‘சி’ தீங்கு விளைவிக்கும் தீவிரப் போக்கினையும் அழிக்கிறது.  சப்போட்டா அதன் வயிற்றுப் போக்குக்கான மருந்துப் பண்பினால் வயிற்றோட் டத்தை நிறுத்துவதாகக் கருதப்படுகிறது. அதற்கு நீரில் இந்த பழத்தினை கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த முடியும்.

மேலும் இது மூல வியாதி மற்றும் வயிற்றுக் கடுப்பினால் ஏற்படும் வலியை தடுக்க உதவுகிறது. சப்போட்டாப் பழத்தைச் சாப்பிடுவதால், மார்புகளில் சளித் தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவா சக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இரும லுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

சப்போட்டாப் பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளைத் தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாக (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படு கின்றன. இதனால் சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது.   சப்போட்டாப் பழம் மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது. மற்றும் இரைப்பையில் தொதிகளின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உடல் பருமன் ஆவதைத் தடுக்கிறது. சப்போட்டாப் பழம் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாக விளங்குகிறது. 

இதனால் அடிக்கடி சிறுநீர் மூலம் உடலிலிருந்துக் கழிவுப் பொருட்களை அகற்ற ஒரு சிறந்த நீர்ப் பெருக்கியாக செயல்படுத்த உதவுகிறது. சப்போட்டாப் பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம். சப்போட்டாப் பழத்தை சாப்பிடுவதால் சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து