முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மகா புஷ்கரம்- புரட்டாசி மாத பிறப்பு விழா: பக்தர்கள் புனித நீராடல்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருச்சி : காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி நேற்று ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதியிருந்து 24-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வைணவ விழா ஆகும்.
இந்த விழாவின்போது பக்தர்கள் காவிரி நதியில் புனித நீராடினால் கங்கையில் குளித்த பயனை அடைவர் என்பது ஐதீகம். விழா தொடங்கிய நாள் முதல் ஏராளமானோர் காவிரி ஓடும் இடங்களில் குளித்து வருகின்றனர்

தண்ணீர் திறப்பு

பக்தர்கள் இந்த விழாவின் புனிதநீராட ஏதுவாக மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களில் உள்ளவர்கள் மேடான பகுதிக்கு செல்லவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி துலா ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். இதனால் துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புனித நீராடுவது சிறப்பாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலாகட்டத்தில் கடந்த 4 நாள்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று புரட்டாசி மாத பிறப்பையொட்டி, 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை, கற்பூரம் ஆகியவற்றை வாங்கினர்.

காவிரிக்கு ஆரத்தி

இதைத் தொடர்ந்து நீராடிய பக்தர்கள் காவிரி தாய்க்கு ஆரத்தி எடுக்கும் விதமாக வெற்றிலையில் பூஜை பொருள்களை வைத்து கற்பூரம் ஏற்றி ஆற்று நீரில் மிதக்க விட்டனர். புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரி நீரில் நீராடினர். கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும் . இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில்  பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக 3 வது சனிக்கிழமை மிகவும் விசேஷமான நாளாகும். அன்றைய தினம் பெருமாளை வழிபடுவது சிறப்பு. இந்த மாதத்தில் தான் , அதாவது நாளை ( செவ்வாய்கிழமை) மகாளய  அம்மாவாசை வருகிறது. அன்றைய தினம் பக்தர்கள் தங்களுடைய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். கோயில்கள் மற்றும் நீர்நிலைகளில் இவ்வாறு தர்ப்பணம் செய்யப்படுவது வழக்கம். ஆடி அம்மாவாசை, தை அம்மாவாசை, புரட்டாசி அம்மாவாசை இந்த மூன்றும் தர்ப்பணம் கொடுப்பதற்க்கு ஏதுவான மாதங்களாகும். குறிப்பாக நாளை வரும் மகாளய அம்மாவாசை மிகவும் விசேஷமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து