முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல், மோடியை விரைவில் புரிந்துகொள்வார்: தமிழிசை நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, கமல், மோடியை விரைவில் புரிந்துகொள்வார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

சுதந்திரத்துக்கு பிறகு ஒரு பலமான பிரதமர் கிடைத்துள்ளார். இந்த தருணத்தில் நாட்டை பலப்படுத்த துணை நிற்க வேண்டுமே தவிர பலவீனப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் செயல்பாடு இருக்கக் கூடாது. தமிழகமும் தேசியத்தின் பக்கம் இருந்திருந்தால் பல பிரச்சினைகளை தீர்த்து இருக்க முடியும். திராவிட கட்சிகள் உணர்வுகளை தூண்டி பேசி வந்த அளவுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரவில்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லோரும் தனது உறவினர்கள் என்கிறார் கமல். அப்படி இல்லாத நிலையில் இருக்கும் கெஜ்ரிவால் எப்படி உறவினர் ஆக முடியும்?. புரையோடிக்கிடக்கும் ஊழலை அகற்றவும், ஊழல் இல்லாத நிர்வாகத்தை தரவும் 3 ஆண்டுகளாக பாடுபடும் மோடிதானே அவருக்கு முதல் உறவினராக இருக்க முடியும். தேசிய கட்சியான பா.ஜனதாவை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் ஒரு நடுநிலையானவர்.
பசுவதை எதிர்ப்பாளர்களுக்கு எதி ரானவர் என்று தன்னைப் பற்றி கமல் குறிப்பிட்டுள் ளார். இதைத்தானே மோடியும் கூறி வருகிறார். மோடி ஆட்சியில் மதக் கலவரங்கள் நடந்தது இல்லை. மதம் சார்ந்த எந்த முடிவையும் அவர் எடுக்க வில்லை. பிரதமர் மோடி சில வி‌ஷயங்களில் நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளார். சிலர் இதில் வாக்குறுதி மட்டும் தான் கொடுப்பார்கள். ஆனால், மோடி முயற்சித்து பார்த்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தூய்மை இந்தியா திட்டம் சிறப்பானது. பண மதிப்பு ஒழிப்பு திட்டமும் சிறந்த திட்டம்தான்.

ஆனால், இப்போது சிலர் அதைப்பற்றி விமர்சிக்கிறார்கள். நான் பொருளாதார நிபுணர் அல்ல. எனவே, இதில் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கமல், மோடியை ஓரளவு புரிந்துள்ளார் என்பது புலனாகிறது. காவி பற்றிய கருத்தும் தவறான புரிதல் என்றே நினைக்கிறேன். விரைவில் அவர் மோடியை பற்றி முழு அளவில் புரிந்து கொள்வார். நான் முதல்வர் ஆனால் இதையெல்லாம் செய்வேன் என்பது 6-ம் வகுப்பு முதல் எழுதும் கட்டுரை.நினைப்பதும், சொல்வதும் எளிது. மீண்டும் மீண்டும் தமிழகத்தை பரிசோதனை களமாக்கி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை விட தேசியத்தின் பக்கம் சென்று வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து