முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி முதல் உலககோப்பையை வெல்ல காரணமான அன்றைய கேப்டன் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கை இந்தியில் படமாகி வருகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் தெண்டுல்கர், டோனி, விளையாட்டு வீராங்கனை மேரிகோம் ஆகியோருடைய வாழ்க்கை படமாகி இருக்கிறது. அடுத்து இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் முதல் உலககோப்பையை வெல்ல காரணமான அன்றைய கேப்டன் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது.

இயக்குனர் கபீர்கான் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிக்க இந்தி நடிகர் ரன்வீர்சிங் ஒப்பந்தமாகி இருக்கிறார். கபில்தேவ் படத்தை, பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து