முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனாமா ஊழல் வழக்கு: அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

மும்பை : பனாமா ஊழல் வழக்கில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது.

உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, 'பனாமா லீக்ஸ்' ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது பெயரும் இடம்பெற்றன. இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, தற்போது அதற்கான விளக்கம் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பக் கூடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து