முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      கரூர்
Image Unavailable

 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று (03.10.2017) வெளியிட்டார்.

 தேர்தல் ஆணையம் உத்தரவு

 இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின்படி கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம்(தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் 2018 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று (03.10.2017) வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச் சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக 03.10.2017 முதல் 31.10.2017 வரை வைக்கப்படவுள்ளன. மேலும், 07.10.2017 மற்றும் 21.10.2017 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெவுள்ளன.  

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், 01.01.2018 அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத, தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். 03.10.2017 முதல் 31.10.2017 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம். 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரு நாட்கள் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம் நாட்களிலும் வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் மனுக்களை அளிக்கலாம். மேலும், அங்கீகரிக்கப்பட்ட மக்கள் சேவை மையங்களிலும் இணைய தளம் மூலமாக மனுக்களை அளிக்கலாம் எனவும் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), விமல்ராஜ் (குளித்தலை), மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவப்பிரியா, நகராட்சி ஆணையர் அசோக்குமார், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து