முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத்திற்கு மே1 தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் வருகின்ற மே1 நடத்த திங்களன்று நடைபெற்ற கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல்

 கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் சங்க தலைவர் கேசவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க செயலாளர் அப்துல் கறீம், பொருளாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் இண்டு வரவு செலவு கணக்கு ஊறுப்பினர்களிடம் ஓப்படைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் ஓருமித்த கருத்து ஏற்படாததால் சங்க நிர்வாகிகள் தேர்விற்கு தேர்தல் நடத்த முடிவானது.அதன் படி சங்க சட்ட ஆலோசகர் சம்பத், வழக்கறிஞர்கள் வேலு, சிவக்குமார் மற்றும் சங்க மூத்த ஊறுப்பினர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.அதன்படி 2018 ஏப்ரல்29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவும், ஏப்ரல்30 வேட்புமனு திரும்ப பெறவும், மே1 தேர்தல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் இரு மேம்பாலங்கள் திறந்து 5 வருடம் ஆகியும் பேருந்துகள் கும்மிடிப்பூண்டி பஜாரில் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லாமல், பைபாஸ் சாலை வழியே சென்ரு விடுகிறது. இதனால் பயணிகள் பைபாஸ் சாலையில் இறங்கி ரயில்வே பாதையை ஆபத்தான முறையில் கடந்து கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு 1 கி.மீ தூரம் நடந்து வருகின்றனர். எனவே அனைத்து பேருந்துகளும் கும்மிடிப்பூண்டி பஜாரில் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் எயற்றப்பட்டது. கும்மிடிப்பூண்டி பஜாரில் மழைநீர் கால்வாய் போடப்படுவதால், அதன் அருகே அமைந்திருக்கும் கழிவு நீர் கால்வாய் உடைக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு, தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு ஊள்ளதால், பேரூராட்சி சார்பாக தினமும் எந்த கால்வாய்களில் கொசுப்புகை அடித்து கொசுக்களினால் ஏற்படும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் சாலை ஒர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் சாலையோர கடைகளை அகற்றி அவர்களை வேறிடத்தில் கடை வைக்க நெடுஞ்சாலை துறை, பேரூராட்சி துறை நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த கூட்டத்தை ஒட்டி கும்மிடிப்பூண்டியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சுமார் 750 வியாபாரிகள் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து