முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 28, லட்சத்து 61ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்: கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      கோவை

கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (03.10.2017) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலெக்டர் த.ந.ஹரிஹரன் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தெரிவித்தாவது,

கலெக்டர் தகவல்

கோயம்புத்தூர் மாவட்த்தில் 06.01.2017 முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்; வெளியிடப்பட்டது.

அதன்படி, தற்சமயம் 111-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,34,992 ஆண்கள், 1,40,641 பெண்கள், 28-மூன்றாம் பாலினம் என 2,75,661 வாக்களார்களும், 116-சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,42,946 ஆண்கள், 1,46,304 பெண்கள், 11-மூன்றாம் பாலினம் என 2,89,261 வாக்களார்களும், 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,09,659 ஆண்கள், 2,09,038 பெண்கள், 68-மூன்றாம் பாலினம் என 4,18,765 வாக்களார்களும், 118-கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,56,461 ஆண்கள் 1,53,767 பெண்கள், 27-மூன்றாம் பாலினம் என 3,10,255 வாக்களார்களும், 119தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,52,808 ஆண்கள், 1,53,342 பெண்கள், 54 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,06,204 வாக்களார்களும், 120-கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,22,094 ஆண்கள், 1,21,983 பெண்கள், 12 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,44,089 வாக்காளர்களும், 121-சிங்காநல்லூர் சட்மன்ற தொகுதியில் 1,53,637 ஆண்கள், 1,53,819பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,07,484 வாக்காளர்களும், 122-கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 1,46,553 ஆண்கள், 1,49,278 பெண்கள், 28மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,95,859 வாக்காளர்களும், 123-பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,04,692 ஆண்கள், 1,10,964 பெண்கள், 14மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,15,670 வாக்காளர்களும், 124-வால்பாறை சட்டமன்ற தொகுதயில் 96,566 ஆண்கள், 1,01,709 பெண்கள், 13 மூன்றாம் பாலினம் என மொத்தம் 1,98,288 என மொத்தம் வாக்காளர்கள் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 14,20,408 ஆண்கள், 14,40,845 பெண்கள், 283 மூன்றாம் பாலினம் என மொத்தம் 28,61,536 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 01.01.2018-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யும் பணி 03.10.2017 முதல் 31.10.2017 வரை நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றுத் திருத்தம்; மேற்கொள்ள 03.10.2017 முதல் 31.10.2017 வரை படிவங்கள் வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெறப்படவுள்ளது மேலும் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. எனவே, இதுவரை பெயர் சேர்க்கப்படாத புதிய வாக்காளர்களும், திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டிய வாக்காளர்களும் இந்த வாய்;ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்நிகழச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்னடர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து