முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட தேசிய காசநோய் தடுப்பு சங்கம் சார்பில் காசநோய் வில்லைகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேசிய காசநோய் தடுப்பு சங்கம் சார்பாக, 68வது ஆண்டிற்கான காசநோய் வில்லைகளை கலெக்டர்இல.சுப்பிரமணியன், வெளியிட்டார்.ஒவ்வொரு ஆண்டும், அக்டோபார் 02-ம் தேதி, தேசிய காசநோய் தடுப்பு சங்கத்தின் மூலம், காசநோய் வில்லைகள் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.  மாவட்ட அளவில், மாவட்ட காசநோய் தடுப்பு சங்கத்தின் தலைவராக செயல்படும், கலெக்டர் அவர்களால், இவ்வில்லைகள் வெளியிடப்பட்டு, பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு, காசநோய் ஒழிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது.  இவ்வகையில் இன்று 68-வது ஆண்டிற்கான காசநோய் வில்லைகள் கலெக்டர் அவர்களால் இன்றைய தினம் வெளியிடப்பட்டது.  அதனை துணை இயக்குநர் (காசநோய்) பெற்றுக்கொண்டார்.    காநோய் வில்லைகளை வெளியிட்டு, கலெக்டர்இல.சுப்பிரமணியன், தெரிவித்தாவது:கடந்த ஆண்டு, இவ்வில்லைகள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பங்கு தொகையில், காசநோய் கண்டறிய எக்ஸ்ரே படங்கள் மற்றும் நோயாளிகள் அமர்வதற்கான இருக்கைகள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் காசநோயை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  2 வாரங்களுக்கும் மேல் இருமல்ஃ சளி இருப்பின் மக்கள் தாமாக முன்வந்து சளி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  காசநோயாளிகள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தில் உள்ள அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டம்.  மேலும் காற்றின் மூலம் இந்நோய் பரவுவதால், இருமும் போதோ, தும்மும் போதோ வாயில் கைக்குட்டையே அல்லது துண்டோ பயன்படுத்த வேண்டும்.இந்நோயிற்கான அனைத்து சேவைகளும், அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.  இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  மேலும், இந்நோய் தனியார் மருத்துவமனைகளிலோ, ஆய்வகங்களிலோ கண்டறியப்பட்டால் அதனை உரிய படிவத்தில் மாவட்ட காசநோய் மையத்திற்கு கட்டாயம் தெரியப்படுத்திட வேண்டும்.  அவ்வாறு தெரியப்படுத்த தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்டும்.  காசநோய் பற்றிய அனைத்து தகவல்களை பெற விழுப்புரம் பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தினை அணுகி பயன்பெற வேண்டுமென கலெக்டர் முனைவர்.இல.சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வின்போது, துணை இயக்குநர் (காசநோய்) டாக்டர்.சுதாகர், காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் டாக்டர்.கார்த்திகேயன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ஜெமினி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், நலக்கல்வியாளர் மெஹபுப்பாஷா, அரசு-தனியார் ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், இராஜாமணி, குமார், சுந்தரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து