முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018-ம் ஆண்டுக்குள் ஆளில்லா ரெயில்வே கேட் இல்லாத நிலை உருவாக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      ஈரோடு

தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் காவிரி ஆற்றங்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. ஈரோடு வெண்டிபாளையம் அருகே காவிரி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் நடந்த சுத்தம் செய்யும் பணியை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர்வர்மா பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-காவிரி ஆற்றை பாதுகாக்கும் வகையில் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு ரெயில் நிலையம், ரெயில்வே காலனி ஆகிய பகுதிகளுக்கு தேவையான குடிநீர் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனால் குடிநீர் உந்து நிலையம் பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சாலைகள், நகர் புறங்களில் மட்டுமே சுத்தம் செய்யும் பணி அதிகமாக நடக்கிறது. ஆனால் ஆறுகளை சுத்தப்படுத்த முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ரெயில் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீரை 3 ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. அதுபோல் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது. ஈரோடு ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் உள்ளன. சரக்கு ரெயில்கள் செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டு இருப்பதால் 4 நடைமேடைகள் போதுமானதாக உள்ளன

 

உயர் தர உணவகம்

 

எனவே கூடுதல் நடைமேடைகள் அமைக்க வேண்டிய தேவை இல்லை.ஈரோட்டில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக நடைமேடைகளில் பேட்டரி கார் இயக்குவதற்கு 2 முறை ஏலம் விடப்பட்டது. ஆனால் டிரைவர்கள் நியமிக்கப்படாததால் செயல்படுத்தப்படவில்லை. மேலும், கோவையில் பயன்படுத்தப்படும் ஏர் டாக்சி முறையை ஈரோட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.ஈரோடு ரெயில் நிலையத்தில் உயர்ரக தரமான உணவகம் கிடையாது. எனவே ஈரோட்டில் உயர்ரக உணவகம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. சேலம் ரெயில்வே கோட்டத்தில் 2 ஆயிரத்து 300 களப்பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனாலும் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் 59 ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளன. இதில் ஆட்களை நியமிக்க ஏலம் விடப்பட்டு தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.வருகிற 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 32 ரெயில்வே கேட்டில் ஆட்கள் நியமிக்கப்படும். மீதமுள்ள இடங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆட்கள் நியமிக்கப்பட்டு சேலம் ரெயில்வே கோட்டத்தில் ஆளில்லா ரெயில்வே கேட் இல்லாத நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் கோட்ட உதவி மேலாளர் சந்திரபால், மேலாளர் விஜூரின், நரசிம்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து