முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் : மாவட்ட கலெக்டர்க.லட்சுமிபிரியா தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் சார்பில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா,   தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது :- தமிழக அரசு 05.10.2017 அன்று மற்றும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இம்மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ அலுவலர்களைக் கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நாளை (05.10.2017) முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் தொடர்ந்து 5 நாட்கள் வழங்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழியுடன், டெங்கு குறித்து மருத்துவர்கள் கருத்துரை வழங்கவுள்ளார்கள். பள்ளிகளில் குடிநீர் விநியோகிப்பது, மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைகளில் காண்பித்து சிகிச்சை பெறலாம். அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் காய்ச்சலுக்கென்று சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் வாரம் ஒரு முறை சுத்தம் செய்து, குளோரின் கரைசல் தெளிக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தப்படுத்துதல், மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அணுக வேண்டும். தங்களுடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தண்ணீர் தொட்டி, தண்ணீர்; சேமிப்பு பாத்திரங்களை மூடி பராமரித்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர்              க.லட்சுமி பிரியா,   தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.கே.லோகேஷ்வரி, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ப.ரெங்கராஜன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் ஹேமந்த்சந்த்காந்தி, கோட்டாட்சியர்கள் மோகனராஜன் (அரியலூர்), டினாகுமாரி (உடையார்பாளையம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, அரியலூர் வட்டாட்சியர் சு.முத்துலெட்சுமி மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து