முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் தளி சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்து மரம் முறிந்து பஸ்,லாரி மீது விழுந்தது: போக்கு வரத்து பாதிப்பு

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      சேலம்

ஓசூர் தளி சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்து மரம் முறிந்து பஸ்,லாரி மீது விழுந்தது போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்&தளி சாலையில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று நேற்று காலை திடீரென முறிந்து விழுந்தது.நேற்று முன் தினம் இரவு 68 மி,மீ மழை பெய்தது இதனால் மரம் வேறுடன் சாய்ந்தது. அப்போது நின்றிருந்த லாரி,பஸ் மீது விழுந்தது. காலையில் ரயில் ஒன்று வரும் போது தளி சாலையில் ரயில் கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது தளி சாலையிலும், ஓசூர் பகுதி சாலையிலும் பஸ்கள் லாரிகள்,கார்கள் இருசக்கர வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன.

 

போக்குவரத்து பாதிப்பு

அப்போது ரயில் கேட் அருகில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று வேறுடன் சாய்ந்தது. நின்றிருந்த லாரி,தனியார் பள்ளி பேருந்து மீது விழுந்தது. லாரியும்,பஸ்ஸிலும் டிரைவர்கள் தவிர வேறு ஆட்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .இது குறித்து பஸ் டிரைவர் அருள்மணி கூறியது: நான் மதகொண்டபள்ளி அருகில் இயங்கும் ஒரு தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறேன். நான் ஓசூரிலிரந்து ஒரு டிரிப்புக்கு சுமார் 40 பேர் வீதம் அ¬ழ்த்து செல்வேன். இது இரண்டாவது முறை ஓசூருக்கு வந்தேன். ரயில் வருவதால் கேட் முடப்பட்டிருந்தது. இதனால் பஸ் சாலையில் நின்றிருந்த போது பஸ் மற்றும் லாரி மீது மரம் வேறுடன் சாய்ந்தது. நல்ல வேளை வாகனங்களில் யாறும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

இந்த பகுதியில் மேம்பாலம் இல்லாததால் வாகன நெரிச்சலும் அதிகமாக உள்ளது.பள்ளி நேரங்களில் காத்திருக்க வேண்டியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிறமம் அடைகிறோம் இதனால் இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றார். இது குறித்து தெரிந்து டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தை சிறு துண்டுகளாக வெட்டி அகற்றப்பட்டது. வேறு சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. சுமார் 4 மணி நேரம் அந்த சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து