முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      கடலூர்
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணியினை  கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் அங்குள்ள உபயோகமற்ற பொருட்களான டயர், டீ கப் மற்றும் வாட்டர் பாட்டில் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை கண்டறிந்து அவற்றினை அப்புறப்படுத்தும் பணியினை கலெக்டர் மேற்கொண்டார். அதன் பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் அலுவலகத்திற்கு வருகின்ற பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும், மேலும் அலுவலகத்தின் உட்புறமும், வெளிபுறமும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். இப்பணிகள் வாரந்தோறும் வியாழக்கிழமை மேற்கொள்ளவேண்டும். அலுவலக வளாகத்தில் உள்ள உபயோகமற்ற பொருட்களான விளம்பரப்பலகைகள், டயர்கள், டீ.கட்புகள், வாட்டர் பாட்டில்கள் போன்றவைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றினை உடடினயாக அப்புறப்படுத்துவதால் ஏடிஸ் கொசுப்புழு உருவாகாமல் தடுப்பதோடு டெங்கு காய்ச்சல் பரவாமலும் தடுக்கலாம் என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ‘நான் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருட்களை போடமாட்டேன், அவ்வாறு ஏதேனும் வீணான பொருட்கள் கிடந்தாலும் அவற்றை உடனே அகற்றி விடுவேன். எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை கொசு புகாதவண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒரு முறை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வேன். இதன் மூலம் ஏடிஸ் கொசுப்பு வளராமல் தடுப்பேன் நான் கற்றுக்கொண்டவற்றை அண்டை, அயலார்க்கும் கற்று கொடுத்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உருவாகாமல் பாத்துக்கொள்வேன். தற்பொழுது அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உளமாற உறுதி மொழி கூறுகிறேன் என்ற சுகாதார உறுதிமொழியினை கலெக்டர் பிரசாந்த மு.வடநேரே , , தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.மேலும், இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் தலைமை அலுவலர் தலைமையில் இத்துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுகாதார உறுதிமொழியினை எடுத்துக்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகள் மற்றும் ஏடீஸ் வகை கொசுப்புழு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தனை பொறுத்தவரை இக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும்  மேலும் இக்கொசுப்புழுக்களால் டெங்கு காய்ச்ச்ல் ஏற்படா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நல்ல நீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட இவ்வகை கொசுப்புழுக்கள் சேமித்து வைக்கப்படும் நீர் ஆதாரங்கள், தொட்டிகள், பயனற்ற டயர்கள்,   வீடுகளில்  உபயோகமற்ற பயனற்ற நிலையில் வீசி எறியப்படும் தேவையற்ற பொருட்கள்  ஆட்டுறல்கள், கப்புகள், உடைந்த பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கும் மழை நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து அதன் மூலம் கொசுப்புழுக்கள் உண்டாகி டெங்கு காய்ச்சலுக்கு  வாய்ப்பாக அமைகிறது.   எனவே இதனை  கருத்தில்  கொண்டு  தமிழக முதல்வர் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க இம்மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8 மணி முதல்  11 மணி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை டெங்கு கொசுப்புழு (லார்வா) ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட  உள்ளது.  அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியரகம் முதல் கல்வி நிலையங்கள் மற்றும்  ஊட்டச்சத்து மையங்கள் வரையிலான அனைத்து துறை சார் அலுவல வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீர் அப்புறப்படுத்துதல், தேவையற்ற கொசுப்புழு உற்பத்திக்கு சாதகமான பொருட்கள் ஆகியவற்றை அனைத்து அலுவலர்களுடம் ஒருங்கிணைந்து அப்புறப்படுத்துதல் மற்றும் அழித்தல்  பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  இப்பணிகள் அரசு அலுவலக வளாகங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள், கட்டிடங்கள், தொழிலகங்கள் ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அதே போன்று அனைத்து கல்வி நிலையங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் ஆகியவற்றிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  அனைத்து கல்வி நிலையங்களிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் ஏடீஸ் வகை கொசுப்புழுக்கள் உற்பத்தியாக சாதகமான அம்சங்கள், அதனை அழிக்கும் யுக்திகள் குறித்து கல்வி நிறுவன தலைவர்கள், தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  மேலும்  அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள்  இறைவணக்கத்தின் போது  பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ மாணவிகளுக்கு  டெங்கு காய்ச்சல் பரவல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு செய்ய வேண்டும்.   தொடர்ந்து குடிநீர் ஆதாரங்கள் சுத்தம் செய்தல், நீர் சேமித்து வைக்கப்படும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை கழுவி தூய்மை படுத்துதல், குளோரினேஷன் பணிகள் போன்றவையும்  ஒட்டுமொத்த குழுப்பணிகளாக மேற்கொள்ளப்படும்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், வட்டாட்சியர்கள் பாலமுருகன், சிவா, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து