முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டம் செம்மேடில் நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் ரூ.30.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் செம்மேடு வல்வில்ஓரி அரங்கில் பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று 05.10.2017 நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் திருமதி.மு.ஆசியா மரியம் தலைமையேற்று மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:

நலத்திட்ட உதவி
 

மலைவாழ்மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக இன்றைய தினம் மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் வேளாண்மைத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5220 மதிப்பிலான சோலார் விளக்குபொறி டிரைக்கோடெர்மா விரிடி, உயிர்உரத்திரவம் மண்வள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான காப்பி, மிளகு, சில்வர் ஓக், பலாஒட்டு, வங்கிக்கணக்கு புத்தகம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் மானிய தொகை, லேம்ப் கூட்டுறவு கடன் சங்கத்தின்மூலம் 66 பயனாளிகளுக்கு ரூ.19.49 இலட்சம் மதிப்பிலான வட்டியில்லா பயிர்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மத்தியகால கறவை மாடு வளர்ப்பு வட்டியில்லா கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர்குழு கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 31 கருவுற்ற தாய்மார்களுக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.1,24,000- முதல் தவணை பணம் பெறுவதற்கான ஆணையினையும் என இன்று நடைபெற்ற விழாவில் 213 பயனாளிகளுக்கு ரூ.30.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

கொல்லிமலைப்பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்வசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழும் குழந்தைகளின் கல்வி தரத்தினை உயர்த்திடும் வகையில் இன்றைய தினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செங்கரை பகுதியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் கொல்லிமலைப்பகுதியில் இதற்கென பழங்குடியின நல திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் உரிய அலுவலரிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வங்கி கணக்கு

 

இந்நிகழ்ச்சியில் 100 மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்றிதழ்களும், வேளாண்மைத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5220 மதிப்பிலான சோலார் விளக்குபொறி டிரைக்கோடெர்மா விரிடி, உயிர்உரத்திரவம் மண்வள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான காப்பி, மிளகு, சில்வர் ஓக், பலாஒட்டு, வங்கிக்கணக்கு புத்தகம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் மானிய தொகை, லேம்ப் கூட்டுறவு கடன் சங்கத்தின்மூலம் 66 பயனாளிகளுக்கு ரூ.19.49 இலட்சம் மதிப்பிலான வட்டியில்லா பயிர்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மத்தியகால கறவை மாடு வளர்ப்பு வட்டியில்லா கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர்குழு கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 31 கருவுற்ற தாய்மார்களுக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.1,24,000- முதல் தவணை பணம் பெறுவதற்கான ஆணையினையும் என நடைபெற்ற விழாவில் 213 பயனாளிகளுக்கு ரூ.30.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர்.மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர்.ம.ராஜசேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், வருவாய்த்துறை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொல்லிமலை வருவாய் வட்டாட்சியர் .வே.ராஜகோபால் நன்றியுரை ஆற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து