முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் 45 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி:கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம் அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 45 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியினை கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்.

அறிவியல் கண்காட்சி

இந்த அறிவியல் கண்காட்சியில் வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த 154 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சார்ந்த 738 பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு நிலையான வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, இயற்கை வள மேலாண்மை, நீர் மேலாண்மை, போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் சார்ந்த தங்களது கண்டுபிடிப்புகளை காட்சித்படுத்தியிருந்தனர். இந்த அறிவியல் கண்காட்சியில் 385 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை, 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சியில் கலந்துக்கொண்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் வேளாண்மைத் துறை, ஆற்றல், மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் மறுசுழற்சி மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் மாணவர்களின் கற்பனைத் திறன், திறமை, ஆக்கப்பூர்வம், சமுதாயத்தின் பலன்கள், குறைந்த மதிப்பிலான கண்டுபிடிப்புகள் ஆகிய ஐந்து கூறுகளின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்யப்பட்டு முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் என மதிப்பீடு வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெறும்.இந்த கண்காட்சியில் மாவட்ட முதன்மை அலுவலர் மார்க்ஸ், மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, சாம்பசிவம், குணசேகரன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து