முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டம் பாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தி வரும் வேளாண் திட்டப்பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தி வரும் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்   பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பாக்கம் ஊராட்சியில் 175 ஏக்கர் அளவில் ஒரே இடத்தில் நெல் இயந்திர நடவு சாகுபடி வயல்களை பார்வையிட்டு, 2 ஏக்கர் பரப்பளவில் நெல் இயந்திர நடவு சாகுபடியை துவக்கி வைத்தார்.  இம்முறையில், சாதாரண நடவு சாகுபடியை விட இயந்திரத்தின் மூலம் நடவு செய்வதால் இடுபொருள் செலவு, வேலை ஆட்களின் தேவை கறைவு மற்றும் மகசூல் அதிகரிப்பது குறித்து, விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் கரும்பில் சொட்டுநீர் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட வயலினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்மூலம் நீர் தேவை குறைவதோடு, மகசூல் அதிகரிக்கிறது. வேளாண்மைத்துறையின் மூலமாக பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்து கருத்துக்காட்சியினை பார்வையிட்டு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரப்பு பயிராக உளுந்து விதைப்பு செய்ய உளுந்து விதைகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார்.மேலும் நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் வயலில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரத் தொட்டியினை பார்வையிட்டு, மண்புழு உரம் தயாரிப்பு முறைகளையும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது கண்டமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் இரா.பெரியசாமி, வேளாண்மை அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுரேஷ், சொர்ணாவூர் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராஜ், கண்டமங்கலம் உதவி விதை அலுவலர் தங்கவேல், விரிவாக்க உதவியாளர் ரகோத்தமன், தோட்டக்கலை உதவி இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை தொழில்நுட்ப அலுவலர் வெங்கடேசன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து