முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தகிரியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள்

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      நீலகிரி
Image Unavailable

 கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டிகளில் மாணவர் பிரிவில் தமிழ்நாடு அணியும், மாணவியர் பிரிவில் குஜராத் அணியும் சாம்பியன் கோப்பையை வென்றன.

மண்டல அணிகள்

இந்தியா முழுவதும் உள்ள ஐ.சி.எஸ்.சி,, .எஸ்.சி பாடத்திட்டங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கிடையேயான ஏ.எஸ்..எஸ்.சி எனப்படும் தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள் கோத்தகிரி உட்புரூக் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜ் வளாகத்தில் புதிதாக ஒலிம்பிக் மைதானத்திற்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இப்போட்டிகளில் ஜூட்ஸ் பள்ளி மாணவர்களின் தமிழ்நாடு அணி, கேரளா, குஜராத், ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், உள்ளிட்ட 11 மண்டலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர் பிரிவில் 11 அணிகளும், மாணவியர் பிரிவில் 9 அணிகளும் பள்ளி அணிகள் பங்கேற்றன.

 

மாணவர் பிரிவில் தமிழ்நாடு அணி

கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நேற்று நடைபெற்றன. அரையிறுதி போட்டியில் மாணவர் பிரிவில் தமிழ்நாடு அணி _ஆந்திரா தெலுங்கானா அணியையும், பஞ்சாப் அணி _ஜார்கண்ட் அணியையும் வென்றன. அதன்பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி, பஞ்சாப் அணியை 25_12, 31_29 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. அதேபோன்று மாணவியர்களுக்கான அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி _ஆந்திரா தெலுங்கானா அணியையும், குஜராஜ் அணி _ மத்திய பிரதேச அணியையும் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற விருவிருப்பான இறுதிப் போட்டியில் குஜராத் அணி, தமிழ்நாடு அணியை 25_20, 16_25, 25_22 என்ற செட்கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. மாணவர் பிரிவில் மூன்றாவது இடத்தை ஜார்கண்ட் அணியும், மாணவியர் பிரிவில் மூன்றாவது இடத்தை ஆந்திரா தெலுங்கானா அணியும் பிடித்தன.

அதன் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் சேர்மன் தனராஜன் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் அரசு செயலர் சுர்ஜித் கே.சவுத்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகளையும், பதக்கம் மற்றும் சான்றிதழ்கயும் வழங்கினார்.

 நிகழ்ச்சியில் ஜூட்ஸ் பள்ளி முதல்வர் சரோ தனராஜன், செயல் இயக்குநர் சம்ஜித் தனராஜன், துணை முதல்வர் ராஜி சம்ஜித், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் கோச்கள், மேலாளர்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து