முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறனாய்வு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      விழுப்புரம்

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களையும், திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட திறனாய்வு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிபெற்றவர்களுக்கு கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது தொழில்திறன்களையும், திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படும் என 2016-2017 பட்ஜெட் கூடடத்தொடரின் போது  தொழிலாளர் துறை அமைச்சர் அவர்களால் சட்ட மன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து இப்போட்டிகளை நடத்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை எண்.31 நாள்: 08.03.2017ன் மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.நமது மாநிலத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டவும், தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த எண்ணங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஒரு களத்தினை ஏற்படுத்தவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.  இதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் இத்திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் படைப்பு மாநில அளவில் கலந்து கொள்வதற்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படும்.  இதனடிப்படையில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 05.10.2017 அன்று திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது.  இப்போட்டிகள் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று துறைகளில் நடத்தப்பட்டது.  பிரிவு ஐ-ல் பொறியியல் கல்லூரிகள்ஃ பல்தொழிற்நுட்ப கல்லூரிகள்ஃ பல்கலைக்கழகங்கள்ஃ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்ஃ தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள்ஃ இறுதியாண்டு பயிற்சி பெறுவோர் மற்றும் தொழிற்சாலைகளில் தொழிற்பழகுநர்களாக பயிற்சி பெறுவோர், பிரிவு ஐஐ-ல் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், பிரிவு ஐஐஐ-ல் குறுகிய கால பயிற்சிகள் மூலம் திறன்பெற்றோர் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் பணி அனுபவம் பெற்ற திறனுடையோர் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  பேசியதாவது:இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  இப்போட்டியில் முதலிடம் பெற்றவர்களுக்கு மாநில அளவில் வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். இப்போட்டிகளில் எதிர்பார்த்ததற்கு அதிகமான இளைஞர்கள் பங்கேற்றது வரவேற்கத் தக்கது.  இதுபோன்ற போட்டிகளில் இளைஞர்கள் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக மாவட்டத்தில் இதுபோன்ற போட்டிகள் நடத்த வழிவகை செய்யப்படும்.  இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்வதால், இளைஞர்களுக்கு திறமைகளை ஊக்குவிப்பதோடு மட்டுமில்லாமல், வேலைவாய்ப்புகள் உருவாகும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் மணி, விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் செந்தில், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் முருகேஷ் (உளுந்தூர்பேட்டை), சையத்சலிம் (திண்டிவனம்), உதயகுமார் (சின்னசேலம்) மற்றும் தனியார் தொழில் நிறுவன தளாளர்கள், குறு மற்றும் சிறு தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து