முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 298 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      கடலூர்

கடலூர்  புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 298 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,  முன்னிலையில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  தெரிவித்ததாவது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 72 நிறுவனங்கள் பங்கேற்றதில் 2711 ஆண்களும், 1601 பெண்களும் ஆகமொத்தம் 4312 நபர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து உள்ளனர். இவற்றில் தற்போது 167 ஆண்களும், 131 பெண்களும் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு கோரி விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதோடு தற்போது  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தொழில்துறையில் பல்வேறு பணிகளுக்காக இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு அதிக அளவில் இளைஞர்களை தேர்வு செய்து வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் கடலூர் புனித வளனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 298 நபர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான ஆணையினை இன்றைய தினம் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்ப அளவில் பயின்று இதுபோன்ற முன்னனி தனியார் துறை நிறுவனங்களில் அதற்குரிய வேலைவாய்ப்பினை பெற்று நல்ல முறையில் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். என தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் 298 நபர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) கருணாகரன், மாவட்ட தொழில்மைய உதவி இயக்குநர் திருமதி.லட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து